இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் பெயரில் தற்போது ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. அந்த மைதானத்திய திறந்து வைக்க இன்னும் சில தினங்களில் செல்கிறார் சுனில் கவாஸ்கர். இந்த மைதானம் அமெரிக்காவின் கெண்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில்லேவில் கட்டப்பட்டுள்ளது இந்த மைதானம்.
இந்த மைதானத்தின் பெயர் ‘சுனில் கவாஸ்கர் ஃபீல்டு’ ஆகும். இதற்க்கு முன்னர் இரண்டு கிரிக்கெட் வீரர்களின் பெயரில் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பான் விவியன் ரிச்சர்ட்ஸ் பெயரில் ஆண்டிகுவாவிலும் டேரன் சம்மி பெயரில் செயிண்ட் லூசியாவிலும் கிரிக்கெட் மைதானங்கள் உள்ளது.
தற்போது அந்த வரிசையில் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கரும் சேர்ந்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் விளையாடும் 4வது ஒரு நாள் போட்டியில் வெற்றியைத் தொடரும் முனைப்பில் இந்திய அணி முழு வீச்சில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நாளை நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் சின்னசாமி மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியபோதிலும், எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றியை வசமாக்கும் முனைப்பில் உள்ளது.
விரோட் கோலி தலைமையில் தற்போது விளையாடும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிதான் ‘மிகச்சிறந்த அணி’ என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, கடந்த 24ஆம் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று 3-0 பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இதன்மூலம் 120 புள்ளிகளுடன் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அத்துடன் கடந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், தொடர்ந்து 9 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியக் கேப்டன் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.
இந்நிலையில் விராட் கோலியை பாராட்டி பேசியுள்ள சுனில் கவாஸ்கர், தற்போது கோலி தலைமையில் உள்ள இந்திய அணி ஒரு மிகச்சிறந்த அணி என்றும், இதுவரை இருந்த அணிகளிலேயே இதுதான் சிறந்த அணி என்றும் கூறியுள்ளார்.
தற்போது உள்ள ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் 8 விக்கெட்டுகள் வரை நன்றாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்கள் உள்ளதாகவும், பந்துவீச்சாளர்கள் திறமையாக விளையாடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த அணிக்கு ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் தலைமை ஏற்றுள்ளதாகவும், கோலியை குறிப்பிட்டு அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.