இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது.
இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இன்று துவங்கியது.
இந்த போட்டியில் இந்திய அணி பந்த்வீச்சாளர்கள் மிகச்சிறப்பக செயல்பட்டு ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்ப்படுத்தினார்கள்.
இதுபற்றி சுனில் கவாஸ்கர் கூறியதாவது பல முன்னணி வீரர்கள் காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறவில்லை, இருந்தபோதும் இளம் வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு விளையாடிக்கொண்டிருக்கின்றனர் .
இந்திய அணி பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு முதல் 5 விக்கெட் கைப்பற்றி விட்டனர். நடராஜன் கடைசியாக இரண்டு 2 விக்கெட்களை அடுத்தடுத்து கைப்பற்றினர்.
ஆனால் இந்திய அணிக்கு பிரச்சனை கொடுக்கும் வகையில் டிம் பெய்ன் மற்றும் கேமராமேன் கிரீன் இருவரும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுள்ளனர்.இவர்களது விக்கெட்களை எவ்வளவு விரைவில் எடுக்க முடியுமோ அந்த அளவுக்கு இந்திய அணிக்கு மிகப் பெரும் பலமாக அமையும் என்று கூறினார்.
இந்திய அணி வீரர்கள் மீதமுள்ள 5 விக்கெட்களையும் உடனடியாக கைப்பற்ற வேண்டும் இல்லை என்றால் அது இந்திய அணிக்கு மிகப் பெரும் நெருக்கடியாக அமையும் என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது இந்திய அணியின் முக்கிய வீரர்களாக திகழும் பும்ராஹ்,முஹம்மத் சமி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய முன்னணி அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாத நிலையிலும் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சிகரமான விஷயமாகும் என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது இரண்டாவது நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 350 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும், அப்படி இல்லை என்றால் அது இந்திய அணிக்கு மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்.
இந்திய அணிக்காக நடராஜன்,வாஷிங்டன் சுந்தர் மற்றும் சிராஜ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன, இந்நிலையில் சைனி 7 ஓவர்கள் வீசிய நிலையில் எட்டாவது வரை வீசும் பொழுது காயம் காரணமாக விளையாடாமல் பாதியிலேயே வெளியேறினார்.