ரோஹித் சர்மாவை திட்டி தீர்த்த கவாஸ்கர்!!!

முதல் போட்டியில் சதம் விளாசிய பிறகு, இரண்டாவது போட்டியில் இப்படி மொத்தமாக ஆடியது அதீத முட்டாள்தனமான நம்பிக்கையையே காட்டுகிறது என முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் ரோஹித் சர்மாவை சாடியுள்ளார்.

நாம் எப்போதும் “என்ன இப்படி மோசமாக ஆடுகிறார்” என கூறும்பொழுது எல்லாம் சதங்களும் இரட்டை சதங்களும் அடித்து தன் பாணியில் வாயை மூட வைப்பது தான் இந்திய அணியின் நிகழ்கால துவக்க வீரரான ரோஹித்  சர்மாவின் ஸ்டைல்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, தனது ஷாட் செலக்சனுக்காக பலமுறை கிண்டலும் கேலியும் செய்யப்பட்டிருக்கிறார் ரோஹித் சர்மா. அதே ரசிகர்களால், இவர் அடிக்க ஆரம்பித்தால் ஸ்கோர் மளமளவென எகிறும் எனவும் சொல்ல வைத்திருப்பது தான் இவரின் தனிப்பட்ட வெற்றி.

இவர் நிதானமாக ஆட ஆரம்பித்தால், எதிரணியின் கேப்டனால் களத்தில் நிம்மதியை காண இயலாது. ஒன்று “என்ன இந்த பந்துக்கெல்லாமா அவுட் ஆவாங்க?” என்பது போல சொற்ப பந்துகளில் ஆட்டமிழப்பார். சரிவர கணித்து நிதானமாக ஆட ஆரம்பித்தால் எதிரணி தலையை பிய்த்துக்கொள்ள வேண்டியது தான். பந்துவீச்சாளர்களை சிதறடிக்க கூடிய திறமையான ஆட்டக்காரர்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக..

இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 போட்டி தொடரை வென்று தற்போது ஒருநாள் போட்டிகளை ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 137* ரன்கள் அடித்தார்.

அதே நிலையை இரண்டாவது போட்டியிலும் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்ட பொழுது, தவறான ஷாட் செலக்ஷனால் மார்க் வுட் பந்தில் க்ளீன் போல்டு ஆகி வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

கவாஸ்கர் காட்டம் 

நிலைத்து ஆட வேண்டிய ஆட்டத்தில் இப்படி பொறுப்பில்லாமல் தவறான ஷாட் ஆடி அவுட் ஆகி வெளியேறியதால் ஆட்டத்தின் போக்கே மாறியது. இப்படி ஆடியதை கண்டு இந்திய அணியின் ஜாம்பவான் கடுப்பாடினார்.

அவர் கூறுகையில், “மிக மோசமான ஷாட் ஆடினார், அதுவும் முதல் போட்டியில் சதம் அடித்த பிறகு இப்படி ஆடியது அதிர்ச்சியளிக்கிறது. இது அதீத நம்பிக்கையின் காரணமாக ஆடியதாக கூட இருக்கலாம். மிகவும் நேர்த்தியாக ஆடக்கூடிய ஒரு வீரரிடம் இருந்து இப்படி ஒரு ஆட்டம் என்றால், என்றம் அளிக்கிறது” என கூறினார்.

Vignesh G:

This website uses cookies.