ஹர்திக் பாண்டியாவின் வேலைய இந்த இரண்டு வீரர்கள் பார்த்து கொள்வார்கள்… முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான டி.20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதல் போட்டியிலும் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி இன்று நடைபெறயிருந்தது, ஆனால் இந்திய அணியின் ஆல் ரவுண்டரான க்ரூணல் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், நேற்று நடைபெற வேண்டிய போட்டி, இன்று (ஜூலை 28) ஒத்தி வைக்கப்பட்டது.

இலங்கைக்கு எதிரான இந்தத் தொடரில் இந்திய அணியில் இளம் வீரர்களின் படை மிக பிரமாதமாக விளையாடி இலங்கை அணியை துவம்சம் செய்து வருகிறது. ஆனால் இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மிக மோசமாக விளையாடி சொதப்பி வருகிறார்.இவர் பேட்டிங்கில் மட்டுமல்லாமல் வந்து வீசுவதிலும் மிகவும் மோசமாக விளையாடி வருகிறார். இவருடைய இந்த நிலைமையை பார்த்து கிரிக்கெட் வல்லுனர்கள் ஹார்த்திக் பாண்டியா காயத்திலிருந்து பரிபூரணமாக குணமடையவில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இது நிலைமையில் இவர் விளையாடினால் வருகிற டி20 உலகக் கோப்பை தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்ததாவது, பாண்டியாவிற்கு பதில் வருகிற டி20 உலகக் கோப்பை தொடரில். இந்த இரண்டு வீரர்கள் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். அதில் முதலாமவர் இந்திய அணியின் பந்துவீச்சாளராக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் சமீபமாக நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 69 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார்.இந்நிலையில் பந்துவீச்சில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் தன்னால் சிறப்பாக செயல்படமுடியும் என்று கிரிக்கெட் உலகிற்கு தெரியப் படுத்திய தீபக் சாஹர், ஹர்த்திக் பாண்டியாவிற்கு பதில் மிகச் சிறந்த தேர்வாக இருப்பார் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவதாக இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அதே போட்டியில் 19 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக திகழ்ந்தார். இவரும் ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் தான் என்று சுனில் கவாஸ்கர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.