ரோஹித் சர்மா விஷயத்தில் பிசிசிஐ செய்வது சரியல்ல; வெளுத்துவாங்கிய ஜாம்பவான்!

ரோகித் சர்மாவின் உடல்தகுதி விஷயத்தில் பிசிசிஐ நடந்து கொள்வது மர்மமாகவே இருக்கிறது. முற்றிலும் சரியானது அல்ல என கடுமையாக சாடியிருக்கிறார் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்.

ஐபிஎல் தொடர் லீக் போட்டிகள் நடந்து கொண்டிருக்கையில் திடீரென ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சில லீக் போட்டிகளில் விளையாடவில்லை. அந்த சமயத்தில் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணிக்கான வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் ரோஹித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை.

ரோஹித் காயத்தில் இருப்பதால் அவரின் பெயர் இடம்பெறவில்லை என பிசிசிஐ தரப்பு தெரிவித்தது. பின்னர் கடைசி லீக் போட்டி மற்றும் பிளே ஆப் போட்டிகளில் ரோஹித் நன்றாகவே விளையாடினார். குறிப்பாக இறுதிப் போட்டியில் கிட்டத்தட்ட 70 ரன்கள் விளாசினார்.

இதனால் இவரின் பெயரை மீண்டும் சேர்க்கலாம் என பல பரிந்துரைகள் வந்தன. இருப்பினும் முழு உடல் தகுதியை பரிசோதிக்காமல் அனுமதிக்க இயலாது. எனவே ரோகித் சர்மாவை தேசிய கிரிக்கெட் அகடமியில் சோதனைக்கு செல்லுமாறு அறிவுரை கூறப்பட்டிருந்தது.

அதன்படி ரோகித் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய அகடமியில் பரிசோதனை மற்றும் உடல்தகுதியை மேற்கொண்டு வந்தார். ஆனால் அவரின் முழுமையான காயம் குணமடையும் விதம் குறித்து உரிய முறையில் செய்திகள் வெளியாகவில்லை. இதுகுறித்து விராட் கோலியும் தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

விராட்கோலி கூறுகையில், “வீரர்கள் குணமடையும் விதம் எப்படி இருக்கிறது. அவர்கள் எவ்வளவு நாட்கள் என்னும் பரிசோதனையில் இருப்பார்கள் என தெளிவான தகவல்கள் கூறப்படுவது இல்லை.” என சாடியிருந்தார்.

தற்போது இதனை முன்வைத்து பேசி இருக்கிறார் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர். கவாஸ்கர் கூறுகையில், “ஒரு ரசிகராக ரோஹித் சர்மாவின் உடல்நலம் குறித்து தெரிந்து கொள்வதற்கு அனைத்து ரசிகர்களுக்கும் உரிமை இருக்கிறது. ரோகித் சர்மாவின் காயம் விஷயத்தில் பிசிசிஐ தெளிவாக நடந்துகொள்ளவில்லை. சில விஷயங்களை மூடி மறைப்பது போல தெரிகிறது. காயம் எப்படி இருக்கிறது என்பது குறித்து அவ்வப்போது வெளியே சொல்வதற்கு என்ன மர்மம் இருக்கிறது. ஏன் இதை மர்மமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். பிசிசிஐ இந்த விஷயத்தில் நடந்து கொள்வது சரியல்ல. அவர்கள் நிச்சயம் தெளிவாக அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

இதுபோன்ற தவறை இனியும் செய்யாமல் இருக்க வேண்டும். அதே நேரம் இந்திய அணியின் கேப்டனுக்கும் என்ன நடக்கிறது என்பது குறித்து தெரியப்படுத்த வேண்டும்.” என கோரிக்கை விடுத்தது தனது விமர்சனத்தையும் முன்வைத்திருந்தார்.

Mohamed:

This website uses cookies.