இனிமேலும் காத்திருக்க கூடாது, புதிய பயிற்சியாளருக்கு வலை விரிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி !!

Srh

2023 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரைன் லாராவை தனது அணியின் புதிய பயிற்சியாளராக நியமிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக கருதப்படும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முதல் முதலாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.

அதற்கு பின் எந்த ஒரு தொடரிலும் சன்ரைஸ் ஹைதராபாத் அணியால் பெரிதளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.பந்துவீச்சு பேட்டிங் மற்றும் தலைசிறந்த கேப்டன்கள் என அனைத்து விதமான கட்டமைப்பைகளையும் உள்ளடக்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சரியான காம்பினேஷன் அமையாததால் அவர்களால் அதற்கு அடுத்தடுத்த ஐபிஎல் தொடர்களில் சரிவர விளையாட முடியவில்லை.

 

இந்த நிலையில் தன்னுடைய அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடியை விடுவித்துவிட்டு புதிய பயிற்சியாளரை தனது அணியின் இணைப்பதற்கான திட்டத்தை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

2021ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டைரக்டராக செயல்பட்ட டாம் மூடி, ட்ரெவர் பாய்லிஸ் விலகியதால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார்.குறிப்பாக 2022 ஐபிஎல் தொடரில் கேன் வில்லியம்சன், உம்ரான் மாலிக், அப்துல் சமத் போன்ற முக்கிய வீரர்களை அணியில் தக்க வைத்து அணி சமபலத்துடன் அணியை வைத்திருந்தார்.இருந்தபோதும் 2022 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக அவதிப்பட்ட ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.

இந்த நிலையில் 2023 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு காத்திருக்கும் ஹைதராபாத் அணி தன்னுடைய பயிற்சியாளரின் காளவாசத்தை நீட்டிக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது, மேலும் அவருக்கு பதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரைன் லாராவை(பிரைன் லாரா 2022 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வந்தார்) தனது அணியில் இணைப்பதற்கான முயற்சிகளையும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேற்கூறப்பட்ட எந்த தகவலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.