பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மீது உச்சநீதிமன்றம் புதிய விசாரணைக்கு ஒப்புதல்
உச்சநீதிமன்றம் அமைத்த லோதா கமிட்டி தலைமையிலான குழு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய அறிவுறுத்தியது. இதன் காரணமாக கடந்த ஐந்து வருடங்களாக இந்த மாற்றங்கள் அமல் படுத்தப்பட்டு வந்தது குறிப்பாக பிசிசிஐ யில் பதவி வகிக்கும் எந்த ஒரு நபரும் ஆறு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக பதவி வகிக்க முடியாது.
மேலும் மாநில கிரிக்கெட் சங்கத்தில் ஒரு பதவியில் இருந்தால் மூன்று ஆண்டுகள் கழித்துதான் பிசிசிஐ பதவிக்கு வரமுடியும் மேலும் ஆறு ஆண்டுகள் பதவி வகித்த பின்னர் மூன்று ஆண்டுகள் இடைவெளி விட்ட பின்னர் மட்டுமே அதே பதவிக்கு மீண்டும் பிசிசிஐ இல் இருக்க முடியும்.
இது போன்ற பல மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பிசிசிஐயின் தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலி மற்றும் பொருளாளர் ஜெய்ஷா ஆகியோரின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்துள்ளது. இதில் பொருளாளர் ஜெய்ஷா கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார் .
அவருடைய பதவிக்காலம் மே 7ம் தேதியுடன் முடிவடைகிறது கங்குலியின் பதவிக்காலம் ஜூலை 27-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக இதனை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது ஏற்கனவே சவுரவ் கங்குலி அக்டோபர் மாதம் பதவி ஏற்றிருந்தார். இதன் காரணமாக 2025 ஆம் ஆண்டு வரை இருவரும் ஆறு வருடங்களுக்கு பதவியில் நீடிக்க மனு தாக்கல் செய்துள்ளனர்.