இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மால் இந்தியா இலங்கை இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ளமாட்டார் என தெரிய வந்துள்ளது. கிரிக்பஸ்க்கு அவர் கொடுத்த பேட்டியில் அவர் கூறியதாவது, அவர் காயம் காரணமாக விழகினார் என தெரியவந்துள்ளது, ஆனால் காயத்தின் தன்மை எப்படிப்பட்டது என இன்னும் அறிக்கை தெரியவில்லை. அவர் இந்திய இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் முதல் 11 பேர் பட்டியியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேகப்பந்து வீச அணியில் நுவான் ப்ரதீப் மற்றும் 19 வயதேயான லஹிரு குமாராவிற்க்கும் இடம் கொடுக்கப்பட்டது. லஹிரு கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி 4 விகெட்டுகள் வீழ்த்தியதும் இலங்கைக்கு உற்ச்சாகத்தை அளித்திருக்கும்.
முன்னதாக அஷ்லே குனரத்ட்னாவும் காயம் காரனமாக இந்தியாவிற்க்கு எதிரான தொடரில் இருந்து விலகினார் ,அவரை தொடர்ந்து சுரங்கா லக்மாலும் விழகியது இல்ங்கைக்கு சற்று பின்னடைவை கொடுத்திருக்கும். வலது கை பேட்ஸ்மேனான குனரத்னா, முதல் டெஸ்ட் முதல் இன்னிங்க்சில் ஷிகர் தவான் அடித்த பந்தை பிடிக்க சென்றபோது தனது பெரு விரலில் காயம் ஆனதாக தெரிவித்தார். அந்த காயம் அவரது பெரு விரலில் எலும்பு முறிவை ஏற்பபடுத்தி அவரை இந்திய இலங்கை தொடரில் இருந்து விழக வைத்துள்ளது.
ஜிம்பப்வேவிற்க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோற்க்கும் நிலயில் இருந்த இலங்கை அணியை சரிவில் இருந்து மீட்டு வெற்றி பெற செய்ய அவரது 80* ரன்கல் அடித்த அந்த அற்புதமான ஆட்டம் உதவியது. அந்த அடிப்படையில் இலங்கைக்கு அஸ்லே குனரத்னாவின் விழகல் பெருத்த பின்னடைவை ஏற்ப்படுத்தியுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் தொடங்கும் இவ்வேளையில்யி, இலங்கைக்கானா ஒரே ஆதரவு அவ்வணியின் நட்ச்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் சண்டிமால் அணிக்கு திரும்பியிள்ளார். ரங்கனா ஹெராத் கேப்டானாக செயல் பட்டு வரும் நிலையில் ,இரண்டாவது டெஸ்ட்டில் இருந்து சண்டிமாலே கேப்டனாக செயல்படுவார் என் தெறிகிறது.