ஒன்றாக இணைந்து பயிற்சியை துவக்கிய சுரேஷ் ரெய்னா மற்றும் ரிஷப் பன்ட் வெளியான வீடியோ!

ஒன்றாக இணைந்து பயிற்சியை துவக்கிய சுரேஷ் ரெய்னா மற்றும் ரிஷப் பன்ட் வெளியான வீடியோ!

சுரேஷ் ரெய்னா உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர். ரிஷப் பன்ட் உத்தரகாண்டில் சேர்ந்தவர். இருவரும் தற்போது ஒன்றாக பயிற்சியை துவக்கி உள்ளனர். சுரேஷ் இந்திய அணிக்காக 2005 ஆம் ஆண்டிலிருந்து ஆடுபவர் கிட்டத்தட்ட 190 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

விராட் கோலி கேப்டனாக பதவி ஏற்ற பின்னர் அவருக்கு அணியில் பெரிதாக இடம் கிடைக்கவில்லை. கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரின் போது விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் கடுமையாக உழைத்தும் அவருக்கு அதில் பலன் கிடைக்கவில்லை.

தற்போது 33 வயதான அவர் மீண்டும் எப்படியாவது அணியில் இடம் பிடித்து விட வேண்டும். என்று கடுமையாக உழைக்க துவங்கியுள்ளார். அதேபோல் ரிஷப் பண்ட் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருக்கிறார். இவரும் இடதுகை ஆட்டக்காரர். அதிரடியாக ஆடுவதில் வல்லவர். ஆனால், அணியில் சரியாக ஒரு பேட்டிங் பொசிசன் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

துவக்க வீரராக இறங்கிவிட்டால் அடித்து நொறுக்குவதில் வல்லவர் கரோனா வைரஸ் காரணமாக 4 மாதங்களாக எந்த கிரிக்கெட் போட்டியும் இல்லை. இந்நிலையில் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள சுரேஷ் ரெய்னாவின் மைதானத்தில் ஒன்றாக சேர்ந்து தங்களது கிரிக்கெட் பயிற்சியை துவக்கி உள்ளனர். இந்த பயிற்சியின் வீடியோக்களை சுரேஷ் ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் டுவிட்டர் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

Mohamed:

This website uses cookies.