இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னா குறித்து அவரது தாய் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார். மேலும், ரெய்னா தனது கிரிக்கெட் வாழ்க்கையின் வெற்றிக்கு தன் தாயார் தான் காரணம் எனவும் கூறியுள்ளார்.
சுரேஷ் ரெய்னா ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். ரஞ்சிக் கோப்பை, ஐபிஎல் தொடர்களில் தனது திறமையை நீருபித்தது மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ளார். இந்நிலையில் ரெய்னா குறித்து அவரது தாய் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
இதில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் முறையாக ரெய்னா தேர்வானதில் இருந்து அவரது தாயார் பர்வேஷ் ரெய்னா (Parvesh Raina) பேசினார் “ ரெய்னா என்ன கூப்பிட்டு வீட்ட நல்லா சுத்தம் பண்ணிவைங்கன்னு சொன்னான், அவன் அப்படி சொன்னது எனக்கு ஆச்சர்யமா இருந்தது. எப்பவுமே வீடு சுத்தமா தான் இருக்கும்.
இந்திய கிரிக்கெட் டீமுக்கு செலக்ட் ஆனது எனக்கு தெரியாது. மதியம் ஒரு 2.30 மணிக்கு வீடே மீடியாக்களால நிரஞ்சுடுச்சு அப்ப தான் எனக்கு அவன் இந்தியா டீமுக்கு செலக்ட் ஆனது தெரியும். இப்பவரைக்கும் ரெய்னா எந்தப்போட்டியில விளையாடுனாலும் அதுக்கு முன்னாடி எனக்கு கால் பண்ணி பேசுவான். உங்களோட ஆசிர்வாதம் எனக்கு எப்பவும் வேணும்னு சொல்லுவான்.”
அம்மாவோட சமையல் தான் ரெய்னாவுக்கு ரொம்ப பிடிக்குமாம் எது கொடுத்தாலும் குறையே சொல்ல மாட்டாராம் நம்ம சின்ன தல. ‘தல’ தோனியும், ரெய்னா வீட்டு சமையல்னா வெளுத்து வாங்குவாராம். காதி சாவல் (kadhi chawal) என்ற உணவு ரெய்னாவுக்கு ரொம்ப பிடிக்குமாம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி ரெய்னா பங்கேற்று ஆடிய முதல் போட்டியின் போது அவரது பேட்டில் கையெழுத்திட்டுள்ளார்.