சுரேஷ் ரெய்னா செய்த தவறு… சென்னை அணி ரெய்னாவை எடுக்காததற்கு இது தான் காரணம்; முன்னாள் வீரர் வெளிப்படை !!

ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுரேஷ் ரெய்னாவை எடுக்காதது குறித்தான தனது கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரரான சைமன் டௌல் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

15வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் வைத்து நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்கள் கைவசம் இருந்த தொகையை வைத்து, தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுத்து கொண்டன.

இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மொத்தம் 21 வீரர்களை ஏலத்தில் எடுத்தது. ஏலத்தின் முதல் நாளில் தனது பழைய வீரர்களான தீபக் சாஹர், அம்பத்தி ராயூடு, டூவைன் பிராவோ போன்ற வீரர்கள் மீது முழு கவனத்தையும் செலுத்தி மீண்டும் அவர்களை அணியில் எடுத்து கொண்டது.

என்னதான அம்பத்தி ராயூடு, பிராவோ போன்ற வீரர்கள் மீண்டும் சென்னை அணியில் எடுக்கப்பட்டிருந்தாலும், சென்னை அணியின் வரலாற்றில் மிக மிக முக்கியமானவரான சுரேஷ் ரெய்னாவை சென்னை நிர்வாகம் கண்டுகொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களே, சென்னை அணியின் இந்த முடிவை சமூக வலைதளங்கள் மூலம் மிக கடுமையாக விமர்சித்தனர்.

சுரேஷ் ரெய்னாவை சென்னை அணி ஏலத்தில் எடுக்காததும், மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை ஒரு அணி கூட ஏலத்தில் எடுக்க முன்வராததும் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியதால், முன்னாள் வீரர்கள் பலர், இது குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான சைமன் டௌலும், சுரேஷ் ரெய்னா குறித்தான தனது கருத்தை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து சைமன் டௌல் பேசுகையில், “சுரேஷ் ரெய்னாவை சென்னை அணி மீண்டும் எடுக்காததற்கு 2-3 காரணங்கள் இருப்பதாக எனக்கு தெரிகிறது. குறிப்பாக 2020ம் ஆண்டுக்கான தொடரில் சுரேஷ் ரெய்னா திடீரென சென்னை அணியில் இருந்து விலகி நாடு திரும்பியதால், அவர் சென்னை அணியின் விசுவாசத்தையும், தோனியின் விசுவாசத்தையும் இழந்திருப்பார். அந்த தொடரில் சென்னை அணி மிக மோசமாக விளையாடி முதன்முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூடு தகுதிபெற முடியாமல் வெளியேறியதற்கு சுரேஷ் ரெய்னா விலகியதும் ஒரே காரணமாகவே பார்க்கப்படுகிறது. அதுபோன்ற ஒரு செயலை நீங்கள் செய்தப் பின்னர், பெரும்பாலும் உங்களை மீண்டும் மனதார யாரும் வரவேற்க மாட்டார்கள். அத்துடன் அவர் தற்போது முழு உடல் தகுதியுடன் இல்லாமல் இருப்பதுடன் ஷார்ட் பால் பந்துகளுக்கு பயப்படுகிறார். 2020-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தால், ஏற்கனவே அதிருப்தியில் இருந்த சென்னை அணி நிர்வாகம் சமீப காலங்களாக, அவர் மோசமான பார்மில் இருந்து வருவதை காரணம் காட்டி தற்போது அவரை ஏலத்தில் எடுக்கவில்லை என நான் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.