இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது,இந்திய அணி இந்த நான்கு வீரர்களை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக பயன்படுத்தலாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
வருகிற 2023இல் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு இந்திய அணி பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது.
என்னதான் பல மாற்றங்களை செய்தாலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பஞ்சாயத்து இன்னும் நிலவிக் கொண்டே வருகிறது. தற்போதைய இந்திய அணியின் நிலைமை துவக்க வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் இந்திய அணி வெற்றி பெறும் அப்படி இல்லை என்றால் இந்திய அணி தோல்வி அடையும் என்ற நிலையில் உள்ளது.
இந்திய அணி 50 ஓவர் போட்டிகளில் எப்பொழுதும் நட்சத்திர வீரர்களான கே எல் ராகுல் விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் போன்ற வீரர்களின் மட்டுமே முழுமையாக நம்பியுள்ளது ,இவர்கள் தனது விக்கெட்டை வெகு சீக்கிரமாக இழந்துவிட்டால் இந்திய அணியின் நிலைமை அதோகதிதான்.
இதன்காரணமாக 2015 உலக கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணி அம்பத்தி ராயுடு, அஜிங்கிய ரஹானே, விஜய் சங்கர் போன்ற சிறந்த வீரர்களை எல்லாம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக பயன்படுத்தி பார்த்தது, ஆனால் இது எல்லாம் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனையை போக்கவில்லை.
இந்த நிலையில் இந்திய அணியின் பிரச்சனையைப் போக்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அதில், கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக பலரையும் நியமித்தது, ஆனால் இதுவரை நிலையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அமையவில்லை, இதன் காரணமாக இந்திய அணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் இவர்கள் இருவரும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். இவர்களைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் சுப்மன் கில் ஆகிய வீரருக்கும் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் வாய்ப்பளிக்கலாம், அதேபோன்று உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் அதிரடி பேட்ஸ்மேன் ரின்கு சிங்கிற்கு மிடில் ஆர்டரில் வாய்ப்பு அளிக்கலாம் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்திருந்தார்.
இதில் 2022 ஐபிஎல் தொடரில் 55 லட்சம் தொகைக்கு கொல்கத்தா அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ரின்கு சிங்கை சுரேஷ் ரெய்னா இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவராக தேர்வு செய்யுங்கள் என்று கூறியது, அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.