ரோகித், விராட்கோலி இல்லை; இவர்கள் இருவரின் ஆட்டம் தான் இந்தியாவுக்கு கோப்பையை பெற்றுத்தரும் – உறுதியாக சொல்லும் முன்னாள் வீரர்!

இவர்கள் இருவரின் ஆட்டம் தான் இந்திய அணிக்கு கோப்பையை பெற்றுத்தரும் என்று கணித்துள்ளார் சுரேஷ் ரெய்னா.

உலககோப்பைக்கு சென்றுள்ள இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. தகுதி சுற்று முடிவுற்றவுடன் சூப்பர் 12 சுற்று துவங்கும். அக்டோபர் 23ஆம் தேதி இந்திய அணிக்கு முதல் போட்டி நடைபெறுகிறது. இதில் பலம்மிக்க பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது என்பதால், கூடுதல் கவனத்துடன் களமிறங்குவதற்கு தயாராகி வருகிறது.

சமீபகாலமாக இந்திய அணிக்கு சூரியகுமார், விராட் கோலியின் பார்ம் நம்பிக்கை அளித்து வருகிறது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் 23 போட்டிகள் விளையாடி 801 ரன்கள் அடித்திருக்கிறார் சூர்யகுமார் யாதவ். மேலும் கீழ் வரிசையில் ஹர்திக் பாண்டியா விளையாடும் விதம் அணியின் ஸ்கொரை உயர்த்த வெகுவாக உதவுகிறது. இளைஞர் அர்சதீப் சிங் துவக்கத்தில் இன்-சுவிங் மற்றும் அவுட்-சுவிங் இரண்டையும் வீசுகிறார். பவர்-பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்கிறார். பும்ரா இல்லாத குறையை இவர் தான் தீர்த்து வைப்பார் என்று அணி நிர்வாகம் நம்புவதாக தகவல்கள் வருகிறது.

இந்நிலையில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு திருப்புமுனையாக இந்த இரண்டு வீரர்கள் தான் இருப்பார்கள் என சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்திருக்கிறார்.

“மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவ் விளையாடும் விதம் ரன் குவிக்கும் வேகத்தை அதிகரித்து வருகிறது. இரண்டு வருடங்களாக அவர் செயல்பட்ட விதத்தை இந்த உலகக் கோப்பையில் காட்டினால் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். பினிஷிங் ரோலில் தோனி இல்லாத குறையை ஹார்திக் பாண்டியா அவ்வபோது தீர்த்து வைக்கிறார். அவரது பேட்-ஸ்விங் நன்றாக இருக்கிறது. வேகப்பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொள்கிறார். மேலும் பந்துவீச்சிலும் நல்ல பங்களிப்பை கொடுத்து வருவது அணிக்கு மேலும் பலத்தை சேர்த்திருக்கிறது. ஆஸ்திரேலியா மைதானத்தில் இவரது பங்களிப்பும் இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமையும் நினைக்கிறேன். இவர்கள் இருவரும் நன்றாக செயல்பட்டால் உலகக் கோப்பை இந்திய அணிக்குத்தான்.” என்றார் சுரேஷ் ரெய்னா.

இளம் வீரர் அர்ஷதீப் சிங்கை அதிக போட்டிகள் விளையாட வைக்கவேண்டும். முதல் போட்டியில் ஏதாவது தவறு செய்துவிட்டால் உடனடியாக வெளியே அனுப்பிட வேண்டாம் என்றும் ரெய்னா கோரிக்கை வைத்தார்.

Mohamed:

This website uses cookies.