ஐ.பி.எல் தொடரை முன்னிட்டு சி.எஸ்.கே வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடப்பு ஐ.பி.எல் தொடர் வரும் 29ம் மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை – சென்னை அணிகள் மோத உள்ளன. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பின் இந்திய அணியில் இடம்பெறாத தோனி, ஐ.பி.எல் தொடருக்கான பயிற்சியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த வாரம் தொடங்கினார்.
மகேந்திர சிங் தோனியுடன் சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, ஹர்பஜன் உள்ளிட்ட சி.எஸ்.கே வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். வலைப்பயிற்சியின் போது தோனி தொடர்ந்து 5 சிக்சர்கள் விளாசிய வீடியோ இணையத்தில் வைரலானது.
தற்போது தோனியின் பேட் மீது தவறுதலாக கால்பட்டதால் சுரேஷ் ரெய்னா அதனை தொட்டுக் கும்பிடும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பயிற்சி ஆட்டத்தின் நடுவே இருவரும் கலந்து ஆலோசிக்கின்றனர். அப்போது ரெய்னாவின் கால் தவறுதலாக தோனியின் பேட் மீது பட்டுவிடுகிறது. எதர்ச்சையாக நடந்துதான் என்பதால் தோனி எந்தவித ரியாக்ஷனும் காட்டவில்லை். ஆனால் ரெய்னா பெருந்தன்மையுடன் அந்த பேட்டை தொட்டு கும்பிடுகிறார்.
Photo by: Arjun Singh /SPORTZPICS for BCCI
அப்போது, பாதுகாப்பை மீறி மைதானத்தில் நுழைந்த ரசிகர் ஒருவர் கேப்டன் தோனி காலில் விழுந்தார். இதனால் மைதானத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த ரசிகரை மைதான பாதுகாவலர்கள் தூக்கிச் சென்றனர்.
ஐ.பி.எல் போட்டிகளை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கடந்த சில நாட்களாக பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் அதனை தினந்தோறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு சென்னை அணி வீரர்கள் ஹோலி கொண்டாடிய புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை அணி வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் சென்னை அணி வீரர்கள் முரளி விஜய், புதிதாக சேர்க்கப்பட்ட ஜெகதீஷன், சாய் கிஷோர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் தோனி, ஹர்பஜன் சிங் உட்பட அனைத்து வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ ஒன்றையும் ஹோலி ஸ்பெஷலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.