மீண்டும் இந்திய அணிக்காக ஆடுவதை நினைத்துக்கூட பார்க்காதீர்கள் உங்கள் கதை அவ்வளவுதான் முன்னாள் வீரர் ஓபன் டாக்
இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 16 வருடங்களாக விளையாடி வருபவர் சுரேஷ் ரெய்னா. கடைசியாக கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற டி20 தொடரில் விளையாடினார். அதன் பின்னர் இவரால் பெரிதாக ஆட முடியவில்லை. பெரும்பாலும் தோனியின் தலைமையில் இருந்த இந்திய அணியில் இவர்தான் முக்கிய வீரராக இருந்தார்.
தொடர்ந்து பல சாதனைகள் படைத்தார். ஒருநாள் போட்டிகளில் 5515 ரன்களும் 5 சதங்கள் 36 அரை சதங்கள் விளாசியுள்ளார். அதேபோல் டி20 போட்டியில் 1605 ரன்களும் ஒரு சதம் மற்றும் 5 அரை சதம் விளாசியுள்ளார். இவை அனைத்தும் தோனியின் தலைமையில் நடைபெற்றது தான்.
விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற இவருக்கு அணியில் பெரிதாக இடம் கிடைக்கவில்லை. ரெய்னாவிற்கு மாற்றாக பல வீரர்கள் வந்து விட்டார்கள் பெரும்பாலும் விளையாடி வந்த மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் விராட் கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் விளையாடுகின்றனர். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே இவரால் விளையாட முடியும்.
இந்நிலையில் மீண்டும் சுரேஷ் ரெய்னா இந்திய அணியில் விளையாட முடியாது என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் . அவர் கூறுகையில்…
சுரேஷ் ரெய்னா இந்தியாவிற்காக விளையாடுவதற்கு அடையாளம் மட்டுமே தற்போது இருக்கிறது. மிகச் சிறந்த பீல்டராக இருந்தார். இடதுகை ஆட்டக்காரர். ஆனால் தற்போது உள்ள இந்திய அணியை பார்த்தால் பெரும்பாலும் இளைஞர்கள் இருக்கின்றனர்.