சற்று முன்: புதிய அணிக்காக ஆடப்போகும் சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டியில் தனது பரம எதிரியான மும்பையிடம் தோற்றது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அற்புதமாக ஆடி 26 விக்கெட்டுகளை வீழ்த்தி வென்ற சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் புதிய அணிக்காக ஆடப் போகிறார். இங்கிலாந்தில் நடக்கும் டி20 தொடருக்காக சர்ரி அணிக்காக அவர் ஒப்பந்தமாகியுள்ளார் .இதன் மூலம் அடுத்த வருட தொடரில் அவர் அந்த அணிக்காக புதிதாக ஆட உள்ளார்.

நடப்பு சாம்யினாக 2019-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் அடியெடுத்து வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ், 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது.

12-ஆவது சீசன் ஐபிஎல் தொடரை ஹாட்ரிக் வெற்றியுடன் தொடங்கியிருந்தாலும், பின்னர் வந்த போட்டிகளில் சரிவை சந்தித்து. குறிப்பாக கேப்டன் தோனி விளையாடாத போட்டிகளில் தோல்வியடைந்தது. இதனால் தொடரின் பிற்பாதியில் வெற்றியும், தோல்வியும் கலந்தே இருந்தது.

மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்ட்ட வாட்சன், ரெய்னா, ராயுடு, கேதர் ஜாதவ், பிராவோ போன்ற முன்னணி வீரர்கள் வேகமாக ரன் குவிக்க தடுமாறியதாலும், பேட்டிங்கின் மொத்த சுமையும் கேப்டன் தோனியின் மீது விழுந்தது. இதனிடையே தோனியின் உடல்தகுதியிலும் பிரச்னைகள் ஏற்பட்டது.

இத்தனை சிக்கல்களுக்கு மத்தியிலும் நடப்பு சீசனின் பெரும்பாலான ஆட்டங்களில் மகேந்திர சிங் தோனி மட்டுமே தனியொருவனாகப் போராடினார். இருப்பினும் இறுதிப்போட்டியில் எதிர்பாராவிதமாக மிகவும் சர்ச்சைக்குள்ளான ரன்-அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதுவே அந்த ஆட்டத்தின் போக்கை மாற்றியதாக சச்சினே பின்னர் குறிப்பிட்டார்.

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தில் வரும் காட்சிகளில் டோனி ஸ்டார்க் எனும் அயர்ன் மேன், தனது மகளிடம் ‘ஐ லவ் யூ 3000’ என்று இறுதி வரை கூறிக்கொண்டிருப்பார். இது அந்த திரைப்படத்தின் முக்கிய சம்பவங்களைக் குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் நேற்று களம் கண்டன. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-ஆவது முறையாக கோப்பையை வென்றது மும்பை அணி. மும்பை அணிக்கு 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னைக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

Sathish Kumar:

This website uses cookies.