சர்ரே டி20 அணியில் ஆஸ்திரேலியாவின் நிக் மேடின்சன் தேர்வு!!
இந்த வருட இங்கிலாந்து உள்ளூர் டி20 தொடர் இன்னும் சில மாதங்களில் துவங்க உள்ளது. இங்கிலாந்து கவுண்ட்டி அணிகள் இந்த டி20 தொடையில் ய்20 அணியாக கலந்து கொள்ளும் ஐபிஎல் தொடர் போன்ற ஒரு விளம்பரம் இல்லை எனினும் பல முக்கியமான வெளிநாட்டு வீரர்கள் இதில் கலந்து கொள்வார்.
8க்கும் மேற்ப்பட்ட அணிகள் இந்த டி20 தொடரில் மோதும். இதில் சர்ரே அணிக்காக ஆடும் வீரர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் முக்கியமாக வெளிநாட்டு வீரர்கள் பலரின் பெயர் இடம்பெற்றது.
இதில் ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் நிக் மேடின்சன் இரண்டாவது வெளிநாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இதே அணியில் இன்னொரு வெளிநாட்டு வீரராக ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த இருவரும் முன்னாள் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேனும், தற்போது சர்ரே அணியின் பேட்டிங் கோச்சாக இருக்கும் மைக்கேல் டி வேனுண்டோ வின் கீழ் செயல்படுவர்.
தற்போது ஆஸ்திரேலியா அணியிலும்.ஆடி வரும் மேடின்சன், இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலா போட்டியிலும் கலந்து கொள்வார்.
தற்போது வரை ஆஸ்திரேலியா அணிக்காக 2 டி20 போட்டிகள், மற்ரும் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார் நிக் மேடின்சன்
சமீபத்தில் கூட ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக ஆடினார் நிக். மேலும், ஐபில் தொடரில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கரீபியன் பிரிமியர் லீக்கில் கயானா அமேசான் வாரியர்ஸ், ஆகிய அணிகளுக்காக ஆடியுள்ளார்.