விலகிய மூன்று வீரர்கள்… இரண்டு இளம் வீரர்களுக்கு தேடி வந்த அதிர்ஷ்டம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது !!

காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய சுப்மன் கில், ஆவேஸ் கான் மற்றும் வாசிங்டன் சுந்தர் ஆகியோருக்கு பதிலாக ப்ரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரின் முதல் ஆகஸ்ட் 4ம் தேதி துவங்க உள்ளது.

இந்த தொடருக்கான பயிற்சி போட்டியின் போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக சுப்மன் கில் (பயிற்சி போட்டிக்கு முன்பே காயம்), வாசிங்டன் சுந்தர் மற்றும் ஆவேஸ் கான் ஆகியோர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விலகினர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் ஐந்து போட்டிகள் கொண்ட நீண்ட தொடர் என்பதால் விலகிய வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் சிலரை தேர்வு செய்து இங்கிலாந்திற்கு அனுப்ப வேண்டும் என இந்திய தேர்வுக்குழு நிர்வாகம், பிசிசிஐ.,யிடம் கோரிக்கை வைத்திருந்தது.

இந்தநிலையில், காயம் காரணமாக விலகிய வீரர்களுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது இலங்கையில் இருக்கும் ப்ரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இலங்கை தொடர் முடிந்த கையோடு இங்கிலாந்து செல்வார்கள் என தெரிகிறது.

நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு மிக சமீபத்தில் டி.20 தொடருக்கான இந்திய அணியில் கால் பதித்த சூர்யகுமார் யாதவ், இலங்கை தொடரின் மூலம் ஒருநாள் தொடரிலும் அறிமுகமானார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதன் மூலமே, தற்போது டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் கால் பதித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள சூர்யகுமார் யாதவிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா, மாயன்க் அகர்வால், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், கே.எல் ராகுல், விர்ந்திமான் சஹா, அபிமன்யூ ஈஸ்வரன், ப்ரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ்.

Mohamed:

This website uses cookies.