தம்பி ரோகித்து.. உனக்கு வேண்டப்பட்டவங்கள டீம்ல எடுக்காத; இந்தியா டெஸ்ட் சீரிஸ் ஜெயிக்கணும்ன்னா இந்த பையன் பிளேயிங் லெவன்ல இருக்கணும் – எச்சரித்த ரவி சாஸ்திரி!

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சூரியகுமார் யாதவ் இருந்தால், மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்வார் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார் என ரவி சாஸ்திரி கணித்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது.

பிப்ரவரி மாதம் முதல் தேதியில் இந்தியாவிற்கு வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் பெங்களூர் அருகே உள்ள மைதானத்தில் சுழல் பந்துவீச்சிற்கு என்று பிரத்தியேகமாக தீவிர பயிற்சி செய்து வருகின்றனர். அதேபோல் இந்திய அணியும் நாக்பூர் மைதானத்தில் ஆஸ்திரேலியா சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதற்கு அதிதீவிரமாக பயிற்சிகள் செய்து வருகின்றனர்.

டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக தாக்கத்தை ஏற்படுத்தி வந்த ரிஷப் பண்ட் இம்முறை அணியில் இல்லை. ஆகையால் அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் மற்றும் இசான் கிஷன் ஆகிய இருவரும் அணியில் இருக்கின்றனர்.

இருவரில் யார் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்கிற சந்தேகங்களும் தொடர்ந்து நிலவி வருகின்றன. இந்த சந்தேகத்தை தீர்க்கும் விதமாக  சூரியகுமார் யாதவ் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. அவர் கூறுகையில்,

“ரிஷப் பண்ட் போன்று தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வீரர் அணியில் இல்லை என்பதை நிச்சயம் பின்னடைவை தரும். ஆனால் அந்த வாய்ப்பை ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நாம் கொடுத்து விடக்கூடாது. அவர்களது ஸ்பின்னர்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. இஷான் கிஷன் ஸ்பின்னர்களை எதிர்கொள்வதற்கு திணறி வருகிறார். அவரை பிளேயிங் லெவனில் எடுத்து வருவது சரியாகப்படவில்லை.

சூரியகுமார் யாதவ் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும். ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர் கொள்வார். ஸ்பின்னர்களுக்கு எதிராக பல சாட்டுகள் கைவசம் வைத்திருக்கிறார். ரிஷப் பன்ட் போன்று தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரரும் ஆவார். அனைத்து விதத்திலும் பார்க்கும் பொழுது சூரியகுமார் யாதவ் மிகச் சரியான தேர்வாக இருப்பார். ரோகித் சர்மா கடைசி நேரத்தில் எந்தவித தவறும் செய்து விடாமல் பிளேயிங் லெவனில் இவரை பயன்படுத்த வேண்டும்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.