செம்ம மாஸ்… பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்; டி.20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு !!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் டி20 தரவரிசையில் சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில், பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

மாடர்ன் டே கிரிக்கெட் என அழைக்கப்படும் டி20 கிரிக்கெட் தொடரில் அதிரடி வீரராக வலம் வந்து கொண்டிருக்கும் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சூர்யாகுமார் யாதவ்,அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் தற்போது அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய அணி இக்கட்டான நிலை இருக்கும்போதெல்லாம் தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கும் திறமை படைத்த சூரியகுமார் யாதவ் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 25 பந்துகளில் 46 ரன்கள் அடித்த அசத்திருந்தார்,இதில் 4 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகலும் அடங்கும்.

இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் டி20 தரவரிசை பட்டியலில் 780 புள்ளிகள் பெற்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி சிறந்த பேட்ஸ்மேன் என்ற வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

முதல் இரண்டு இடங்களில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வானும்(825) இரண்டாவது இடத்தில் சவுத் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் எய்டன் மார்க்ரம் (792) இடம்பெற்றுள்ளனர். எதிர்வரும் போட்டிகளிலும் சூரியகுமார் யாதவ் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் நிச்சயம் மார்க்ரம்மை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது.

இவர்களை அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அக்சர் பட்டேல்., ஆரோன் ஃபின்ச், கேமரான் கிரீன் மற்றும் ஜோஸ் இங்கிலிஷ் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி வெறும் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். இதன் மூலம் ஐசிசி தரவரிசை பட்டியல் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான வரிசையில் 24 இடங்கள் முன்னேறி 33வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

முதல் மூன்று இடங்களில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹாசல்வுட், தென்னாபிரிக்க அணியின் சுழற் பந்துவீச்சாளர் தப்ரிஷ் ஷம்ஸி மற்றும் இங்கிலாந்து அணி நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ஆதில் ரஷீத் முறையே இடம்பெற்றுள்ளனர்.

Mohamed:

This website uses cookies.