முதல் டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் சூரியகுமார் யாதவ் இருக்கிறார் என்று சற்று முன் தகவல்கள் வந்துள்ளது.
நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி நாக்பூர் மைதானத்தில் துவங்குகிறது. இரு அணிகளும் இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாக்பூர் மைதானத்தில் சுழல் பந்துவீச்சு நன்றாக எடுபடும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆகையால் ஆஸ்திரேலிய அணியினர் அதற்கென்று பிரத்தியேகமாக பயிற்சிகள் செய்து வருவதாக தகவல்கள் வந்திருக்கிறது. குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் போன்று அச்சுஅசலாக பந்துவீசும் பந்துவீச்சாளரை பிடித்து, வலைப்பயிர்ச்சியில் அவரை பயன்படுத்தி பயிற்சி செய்ததாக ஆஸ்திரேலியா அணியின் நிர்வாகமே தெரிவித்தது.
அதேபோல் இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பெரிதளவில் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஸ்வீப் அடிப்பதில்லை. இது அவர்களுக்கு தொடர்ந்து பின்னடைவை தந்தது. இம்முறை அதிக அளவில் ஸ்வீப் ஷாட்கள் பயிற்சி செய்ததாக இந்திய அணி நிர்வாக தரப்பிலிருந்து தகவல்கள் வெளியானது.
இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் திருப்புமுனையாக இருந்து வந்த ரிஷப் பண்ட், இம்முறை அணியில் இல்லை. இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் முதல்முறையாக டெஸ்ட் அணிக்குள் எடுத்துவரப்பட்டனர்.
இஷான் கிஷன் மற்றும் கேஎஸ் பரத் இருவரில் யார் பிளேயிங் லெவனில் இருப்பார் என்கிற சந்தேகமும் தொடர்ந்து நிலவி வந்தது. பலரும் தெரிவித்து வரும் தகவலை வைத்து பார்க்கையில், கேஎஸ் பரத் முதல் டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனில் இருப்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆகையால் இஷான் கிஷனுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் தெரிந்தது.
மேலும், நாக்பூர் மைதானம் ஸ்பின்னர்களுக்கு நன்றாக எடுபடும் என்பதால், இஷான் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரில் சூரியகுமார் யாதவ் ஸ்பின்னர்களை அபாரமாக எதிர்கொள்வார். மேலும் அவர்களை துளியும் ஆதிக்கம் செய்ய விடமாட்டார். அதிரடியாக விளையாடி தாக்கத்தை ஏற்படுத்துவார். ஆகையால் முதல் டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் சூரியகுமார் யாதவ் இருக்கிறார் என்கிற தகவல்கள் வந்திருக்கிறது.