கொஞ்ச நாள் பொறுத்திருங்க… சூர்யகுமார் யாதவோட அதிரடி ஆட்டம் ஒருநாள் போட்டியிலும் பார்க்கலாம்; முன்னாள் வீரர் உறுதி !!

கொஞ்ச நாள் பொறுத்திருங்க… சூர்யகுமார் யாதவோட அதிரடி ஆட்டம் ஒருநாள் போட்டியிலும் பார்க்கலாம்; முன்னாள் வீரர் உறுதி

ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் சூரியகுமார் யாதவிற்கு அதிகப்படியான வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய இந்திய அணியின் டி20 தொடருக்கான நட்சத்திர வீரராக அறியப்படும் சூரியகுமார் யாதவை ஒருநாள் போட்டிகளிலும் பயன்படுத்தினால் இந்திய அணி மிடில்-ஆர்டர்களில் பலம் வாய்ந்த அணியாக திகழும் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது.

இந்த யோசனையை பயன்படுத்தும் வகையில் இந்திய அணி அவ்வப்போது ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சூரியகுமார் யாதவையும் சேர்த்து அறிவிக்கிறது. ஆனால் அவருக்கு விளையாடுவதற்கு போதுமான வாய்ப்புகள் கொடுக்கவில்லை. எதிர்வரும் உலகக்கோப்பை தொடர், நெருங்குவதற்கு இன்னும் பத்து மாத காலம் கூட இல்லாததால் சூரியகுமார் யாதவை ஒரு நாள் தொடரிலும் பயன்படுத்தி அவர் அணிக்கு பயன்படுவாரா.. மாட்டாரா.. என்பதை பரிசோதித்து விட வேண்டும் என்று இந்திய அணிக்கு பெரும்பாலான முன்னால் வீரர்கள் அறிவுரை கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் குறித்து தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாஷிம் ஜாஃபர்.,ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சூரியகுமார் யாதவை அதிகம் பயன்படுத்த வேண்டும் என இந்திய அணிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அதில், “சூரியகுமார் யாதவ் ஒரு நாள் தொடரை டி20 தொடர் போல் விளையாட வேண்டும் என எண்ணுகிறார். ஆனால் டி20 தொடர்போல் ஒரு நாள் தொடர் மிக குறுகிய போட்டி என்பது அவருக்கு புரியவில்லை. அதனால் அவருக்கு முதலில் இதை புரிய வைக்க வேண்டும். சூரியகுமார் யாதவ் ஒரு நாள் போட்டிகளில் அதிகமாக பயன்படுத்தவில்லை. ஆனால் அவரை ஒரு சில போட்டிகளில் விளையாடவைத்தால், அவர் ஒருநாள் தொடருக்கு ஏற்றார் போல் தன்னை தயார் படுத்திக் கொள்வார். சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் லட்சத்தில் ஒருவராவார்கள், அவரை 50 ஓவர் போட்டியில் 30 ஆவது ஓவர்களில் களமிறங்கும்படி செய்தால் அவர் கடைசி 20 ஓவரை டி20 ஃபார்மட்டில் விளையாடுவது போல் அதிரடியாக விளையாடிவிடலாம், இதனால் இந்திய அணியின் மிடிலாடர் பேட்டிங் பலமாகிவிடும் என்றும் இந்திய அணிக்கு வாசிம் ஜாபர் அறிவுரை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.