வீடியோ: கால்பந்து மைதானத்தில் நெய்மர் உருண்டு புரளும் காட்சியை கிண்டலடித்த சிறுவர்கள் வைரல் வீடியோ

சமீப காலமாக நெய்மர் பற்றிய கிண்டல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக இவர் கீழே விளுட்னது பெரிதாக அடிபட்டது போலும், உருண்டு புரளும் காட்சியும் பெரிதாக கிடாலடிக்கப்பட்டு வருகிறது. இதனை, சிறுவர்கள் தற்போது கிடாலடித்த காட்சி வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் கால்பந்து உலக கோப்பையில் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் அதிகமாக ரசிகளால் கிண்டலடிக்கப்படுகிறார். காயம்பட்டதாக அவர் செய்த நாடகங்களுக்காக பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.  நெய்மர் டைவ் செய்தது அல்லது ஃபவுள் ஆட்டம் ஆடியது ஆகிய காரணங்களுக்காக தற்போது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறார். இவ்வளவு திறமையுடைய வீரர் தவறான செயல்களுக்காக மட்டும் பேசப்படுவது தான் ஏமாற்றம் அளிக்கிறது.
மெக்ஸிகோ பயிற்சியாளர் கடும் சாடல் 
 மெக்சிகோ அணி பயிற்சியாளர் கார்லோஸ் ஒசாரியோ நெய்மரை கடுமையாக விமர்சத்துள்ளார். மேலும் கூறுகையில், “ஆட்டம் எங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தது, ஆனால் ஒரு வீரருக்காக இவ்வளவு நேரம் செலவு செய்யப்பட்டது தான் வெட்கத்திற்குரிய விஷயம்” என்றார்.
பிரேசில் அணி வெளியேற்றம் 

உலக தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரேசில், மூன்றாவது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணியை காலிறுதியில் சந்தித்தது. இதில் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

ட்விட்டரில் வைரலாகி வரும் சிறுவர்கள் வீடியோ:

Vignesh G:

This website uses cookies.