கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆன்ட்ரு ரசல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஸ் டி20 லீக் தொடரில் சிட்னி அணிக்காக ஆடி வருகிறார். இந்நிலையில் பிக் பாஷ் லீக் உலககோப்பைக்கு அடுத்ததாக தொடங்க உள்ளது. இதன் காரணமாக ஆன்ட்ரு ரசல் அந்த அணிக்காக மீண்டும் ஆடுவது சந்தேகமாக உள்ளது, ஏனெனில் இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு உலக கோப்பை தொடரில் ஆடுவார் என்று தெரிய இதன் காரணமாக அவரை சிட்னி தண்டர்ஸ் அனி அவரை இன்னும் ஒப்பந்தம் செய்யவில்லை
ராஜஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது 4-ஆவது வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா. மேலும் அணிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ராஜஸ்தான் தரப்பில் கேப்டன ரஹானே-ஜோஸ்பட்லர் களமிறங்கினர். ஆனால் 5 ரன்களோடு ரஹானே அவுட்டானார்.
பின்னர் ஜோஸ்பட்லர்-ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஜெய்ப்பூர் பிட்ச் மெதுவான பந்துவீச்சுக்கு உதவியதால், ராஜஸ்தான் வீரர்கள் நிதானமாக ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 1 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 37 ரன்களை எடுத்த பட்லர், குர்னே பந்தில் வெளியேறினார். ராகுல் திரிபாதி 6 ரன்களுடன் குர்னே பந்தில் அவுட்டானார்.
இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் 1 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 59 பந்துகளில் 73 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தார். பென் ஸ்டோக்ஸும் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார். 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து ராஜஸ்தான் 139 ரன்களை சேர்த்தது. கொல்கத்தா தரப்பில் ஹாரி குர்னே 2-25 விக்கெட்டை வீழ்த்தினார்.
140 ரன்கள் வெற்றி இலக்குடன் கொல்கத்தா தரப்பில் அதிரடி வீரர்கள் கிறிஸ் லீன்-சுனில் நரைன் களமிறங்கினர். தொடக்கம் முதலே ராஜஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்ததால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 3 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 25 பந்துகளில் 47 ரன்களை விளாசிய நரைன், ஷிரேயஸ் கோபால் பந்துவீச்சில் அவுட்டானார். 3-ஆவது ஓவர் முடிவில் நரைன் அடித்த பந்தை கேட்ச் பிடிக்காமல் கோட்டைவிட்டார் ராகுல் திரிபாதி.
சிறப்பாக ஆடி வந்த கிறிஸ் லீனும் 3 சிக்ஸர், பவுண்டரியுடன் 32 பந்துகளில் 50 ரன்களுடன் ஷிரேயஸ் பந்தில் வெளியேறினார். அவர் தனது 7-ஆவது ஐபிஎல் அரை சதத்தையும் பெற்றார். தொடக்க வீரர்கள் லீன்-நரைன் இணைந்து 50 ரன்களை சேர்த்தனர். ராபின் உத்தப்பா 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 26 ரன்களுடனும், ஷுப்மன் கில் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இறுதியில் 6 ஓவர்கள் மீதமிருக்க 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 140 ரன்களை குவித்தது கொல்கத்தா. ராஜஸ்தான் தரப்பில் ஷிரேயஸ் கோபால் 2–35 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இது குறித்து ரசல் கூறியது:
பொதுவாக கிரிக்கெட் மைதானங்களில் எனக்கு ஏற்றபடி எதுவும் பெரியதாக இல்லை என நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவில் உள்ள ஒருசில மைதானங்களில் பந்துகளை கேலரிக்கு அடித்து எனக்கு நானே ஆச்சரியப்படுத்திக் கொண்டேன். என்னை பொறுத்தவரை எனது உடல் வலிமை மற்றும் திறமையை அதிகம் நம்புகிறேன். தவிர பந்தை அடிக்கும் போது பேட்டின் வேகமும் அதிகமாக இருக்கும். சக வீரர்கள் ஆதரவு தருவதும் வெற்றிக்கு காரணமாக அமைகிறது.‘களத்தில் இறங்கியவுடன், அடித்து விளையாட வேண்டாம், ஒருசில பந்துகளை பார்த்து, ஆடுகளம் எப்படி உள்ளது என தெரிந்து கொள்,’ என கேப்டன் தினேஷ் கார்த்திக் அறிவுறுத்தினார். அதேநேரம் கிறிஸ் லின், உத்தப்பாவின் ஆட்டத்தை ‘டிவியில்’ பார்த்துக் கொண்டிருந்த போது ஆடுகளத்தின் தன்மையை ஓரளவு புரிந்து கொண்டேன்.
20 பந்தில் 68 ரன் தேவை என்பது போன்ற சூழ்நிலை அனைத்து போட்டிகளிலும் இருக்காது. இதற்கேற்ப திட்டமிட்டால் போதும். ‘டுவென்டி–20’ போட்டியில் ஒரு ஓவர் கூட ஆட்டத்தின் போக்கினை மாற்றி விடும். இதுதான் இப்போட்டியின் ‘ஸ்பெஷல்’. இமாலய இலக்கை எட்ட வேண்டும் என்றாலும், நம்பிக்கையை இழக்காமல் போராடினேன். இதனால், 5 பந்து மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றோம். இவ்வாறு ரசல் கூறினார்.