விராட் கோலியின் ஆக்ரோஷம் அணிக்கு தேவையானது தான்: சையத் கிர்மானி

Syed Kirmani of India before the 1st Test match between India and England at Wankhede Stadium, Bombay (Mumbai), India, 27th November 1984. (Photo by Patrick Eagar/Popperfoto/Getty Images)

விராட் கோலியின் ஆக்ரோஷன் அணிக்கு தேவையானது தான் என  முன்னாள் சையத் கிர்மானி கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்ட்ஸ் சென்னையில் நடந்த ஆன்டிகுவா அமெரிக்கா பல்கலைக்கழக மருத்துவ பள்ளி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது சிறந்ததாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டில் தோற்றாலும் மேலும் 2 டெஸ்ட்டுகள் உள்ளன. சிறப்பான யூக்திகளை வகுத்து ஆடினால் இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் தொடரை கைப்பற்ற இன்னும் வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். முந்தையை இந்திய அணியை விட தற்போதுள்ள இந்திய அணி வலுவாக இருக்கிறது. இந்த முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாவிட்டால் இனிமேல் எப்போதும் வெல்ல இயலாது.

விராட் கோலி எனக்கு பிடித்தமான வீரர்களில் ஒருவர் ஆவார். அவர் தனக்காகவும், அணிக்காகவும் ஆக்ரோ‌ஷமான போக்கை கையாள்வது தவறில்லை. மைதானத்தில் போட்டி மனப்பான்மையோடு மோதுவது நல்லது தான்.ஆனால் தனிப்பட்ட முறையில் வார்த்தைகளை பயன்படுத்துவது இனவெறி ரீதியில் சீண்டுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். எதிர் அணியினர் சீண்டினால் கோலி தனது ஆட்டம் மூலம் மீண்டும் திருப்பி தருகிறார்.

ஒரு காலத்தில் கிரிக்கெட் என்றால் வெஸ்ட்இண்டீஸ் தான் என்ற நிலை இருந்தது தற்போது பல்வேறு பிரச்சினைகளால் நிலைகுலைந்துள்ளது.  20 ஓவர் ‘லீக்’ போட்டிகளில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளும் பாதிப்பு ஏற்படக்கூடாது. இதன் மூலம் அதிகமான வருவாய் கிடைத்தாலும் நாட்டுக்கு விளையாடுவதில் தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்

சர்வதேச போட்டிகளில் நாட்டுக்காக விளையாடும் போது ‘லீக்’ போட்டிக்கு முன்னுரிமை தரக்கூடாது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சுமித், வார்னர் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேட்ச் பிக்சிங், சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் கிரிக்கெட் புத்துணர்வுடன் இருக்கும்.

விராட் கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், பிராட் ஹாக் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். “விராட் கோலி இந்திய அணியின் உந்து சக்தியாக, ஆற்றலாக உள்ளார். முழுமையான கேப்டனாக களத்தில் செயல்படுகிறார். போட்டியின் போது ஆடுகளத்தில் அவரை பாருங்கள். அவரது உற்சாகத்தின், ஆற்றலின் அளவும் தீவிரமாக இருக்கும். அவர் தன்னைப் போலவே மற்ற வீரர்களிடமும் அதே அளவு எனர்ஜி இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பார். பேட்டிங்கை பொறுத்தவரையும் விராட் கோலி வேற லெவலில் இருக்கிறார். யாருடனும் ஒப்பிட முடியாத அளவிற்கு அவரது பேட்டிங் திறமை உள்ளது” என்று ஹாக் கூறியுள்ளார்.

மேலும் இந்திய அணிக்காக வெற்றி வாய்ப்பு குறித்து கூறுகையில், “இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களது ஆக்ரோசமான பந்துவீச்சினால் இந்திய அணி முதல் டெஸ்டில் வென்றது. தற்போது உள்ள ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த இந்திய அணிக்கு நல்ல வாய்ப்புள்ளது. அஸ்வின் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால், ஜடேஜா அல்லது குல்தீபை பயன்படுத்தலாம். குல்தீப் பந்து ஆடுகளத்தில் நன்றாக ஸ்பின் ஆகிறது. நாதன் லையன் பந்து கூட அவ்வளவு அதிகமாக ஸ்பின் ஆவதில்லை” என்றார்.

Sathish Kumar:

This website uses cookies.