சையத் முஷ்டாக் அலி கோப்பை : பரோடா அணியில் இருந்து பதான் வேளியேற்றம், மோங்கியாவின் மகனுக்கு அழைப்பு!

சையத் முஷ்டாக் அலி கோப்பை : பரோடா அணியில் இருந்து பதான் வேகியேற்றம், மோங்கியாவின் மகனுக்கு அழைப்பு!

இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் மீண்டும் தனது உள்ளூர் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டுள்ளார். கடந்த பல வருடங்களாக சரியாக பார்ம் இல்லாததால் இந்திய அணியில் இருந்து வேகியே இருக்கும் இர்பான் பதான் தற்போது உள்ளூர் போட்டிகளில் சரியாக ஆடாததால் அந்த அணியில் இருந்தும் கலட்டிவிடப்பட்டுள்ளார்.

இந்த உருட ரஞ்சி கோப்பை தொடரில் 4 போட்டிகளில் மட்டுமே ஆடிய அவருக்கு அதில் சரியாக செயல்படாததால் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டு இளம் வீரர் தீபக் ஹூடா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

தற்போது உள்ளூர் டி20 தொடராக சையத் முஷ்டாக் அலி கோப்பை இன்னும் சில வாரங்களில் துவங்க உள்ள நிலையில் இந்த தொடரில் தனது அணி பரோடாவிற்காக பங்கேற்க முடியாத நிலை ஏற்பபட்டுள்ளது.

தொடர்ந்து உள்ளூர் அணிகளில் இருந்து வெளியேற்றப்படும் இர்பான் பதான் இந்த மாத இறுதியில் 27 மற்றும் 28ஆம் தேதி நடக்க உள்ள ஐ.பி.எல் ஏலத்தில் எடுக்கப்பட்ட வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது.

ஏனெனில், ரஞ்சி கோப்பையிலும் ஆடவில்லை டி20 தொடராக சையத் முஷ்டாக் அலி தொடரிலும் ஆடவில்லை எனில் அவர் ஐ.பி.எல் தொடரில் எந்த ஒரு அணியாலும் எடுக்கப்படாத நிலை உருவாகி உள்ளது.


மேலும் அவருக்கு பதிலாக முன்னாள் இந்திய கீப்பர் நயன் மோங்கியாவின் மகன் மோகித் மோங்கியா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வருட கூச் பிகார் கோப்பையில் ஒரே ஆட்டத்தில் 260 ரன் அடித்து இதற்கு முன்னர் அவர் தந்தை வைதர்ஹா 230 ரன் சாதனையை முறியடித்தார். இவருக்கு தற்போது 18 வயது தான் ஆகிறது.

பரோடா அணி : தீபக் ஹூடா (கேப்டன்), அடிட் சேத் (விக்கெட் கீப்பர்), கேதார் தேவ்தார், சுவப்னில் சிங், விஷ்ணு சோலங்கி, திரென் மிசெரி, க்ருனால் பாண்டியா, அபிஜீத் கரம்பேல்கர், சோயிப் டை, லுக்மன் மெரிவாளா, ரிஷி அராதே, துருவ் படேல், மோகித் மோங்கியா, உர்வில் படேல், நிநாட் ரத்வா

Editor:

This website uses cookies.