இந்திய அணிக்காக மணிஷ் பாண்டேவை விடுவிக்கிறது கர்நாடாகா !!

Pandey is a part of ODI squad to face South Africa, hence, he was not included. However, he could have played a game or two for the team but KSCA didn’t include him.

இந்திய அணிக்காக மணிஷ் பாண்டேவை விடுவிக்கிறது கர்நாடாகா

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இந்திய ஒருநாள் அணியில் மணிஷ் பாண்டே இடம்பெற்றுள்ளதால், அவர் சையத் முஸ்தாக் அலி டிராபிக்கான கர்நாடாக அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் ரஞ்சிக்கோப்பை தொடரைப்போல டி-20 தொடர் சையது முஸ்தாக் அலி கோப்பை தொடர் நடத்தப்படுவதும் வழக்கம்.

இதில் இந்தியாவின் உள்ளூர் அணிகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்கும்.

இந்த ஆண்டுக்கான இந்த தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் கோப்பையை கைப்பற்ற போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து வெற்றிப்பாதையில் பயணித்து வரும் கர்நாடாக அணியில் இருந்து அந்த அணியின் நட்சத்திர வீரர் மணிஷ் பாண்டே விடுவிக்கப்பட்டுள்ளார்.

Karnataka have released Manish Pandey from the squad for the Syed Mushtaq Ali Trophy Super League.

 

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் மணிஷ் பாண்டே இடம்பெற்றிருப்பதால், அவரை கர்நாடாக அணி தனது அணியில் இருந்து விடுவித்துள்ளது.

பந்துவீச்சாளர் வினய் குமார் வழிநடத்தி வரும் கர்நாடாக அணியில் கருண் நாயர், ஸ்டூவர்ட் பின்னி, அபிமன்யூ மிதுன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடி அதில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று, தனக்கான பிரிவில் முதலிடத்தில் உள்ள கர்நாடகா அணி, அடுத்ததாக சூப்பர் லீக் தொடரில் பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை, ஜார்கண்ட் அணிகளை எதிர்கொள்ள உள்ளது.

Mohamed:

This website uses cookies.