உத்திர பிரதேச டி20 அணிக்கு ரெய்னா கேப்டன், குல்தீப் யாதவ் அணியில்!
இந்த வருடம் நடைபெற இருக்கும் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் பங்குபெற இருக்கும் உத்தர பிரதேச அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக நல்ல பார்மில் இல்லை என்றாலும் அவர் உத்திரபிரதேச அணிக்கு கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது சமீபத்தில் நடந்த யோ-யோ உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளதால் அவர் இந்த சையத் முஷ்டாக் அலி கோப்பையில் ஓரளவிற்கு ரன் அடித்தால் கூட இந்திய அணிக்கு அவர் திரும்ப வாய்ப்புகள் உள்ளது.
மேலும், இந்திய அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் உத்திர பிரதேச அணியிக் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இந்திய அணியின் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்திய அணியின் முன்னாக வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமாரும் உத்திரபிரதேச அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் நுழைய இவர் போட்டியிடவில்லை என்றாலும், இந்த சையத் முஷ்டாக் அலி கோப்பையில் நன்றாக ஆடுவதன் மூலம் வரும் ஐபிஎல் தொடரில் ஒரு அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். இதனால் இவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்ற வருடம் இவர் குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சில முன்னணி வீரர்களும் உத்திர பிரதேச சையத் முஷ்டாஸ்க் அலி கோப்பைகாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
உத்திரபிரதேச அணி : சுரேஷ் ரெய்னா (கேப்டன்), அபிசேக் கோஸ்வாமி, அக்சதீப் நாத், அமித் மிஸ்ரா, சிவம் சௌத்ரி, ஏகலைவா டிவெடி, சருல் கன்வர், சல்மான் கான், குல்தீப் யாதவ், பிரவீன் குமார், மொஹஸீன் கான், அங்கிட் ராஜபூட், சாம்ராத் சிங், சௌரவ் குமார், உமாங் சர்மா, ரிகு சிங்