வீடியோ; ஆணவத்தில் ஆடிய ஸ்ரீசாந்த்; வச்சு செய்த இளம் வீரர் !!

சையத் முஸ்தாக் அலி தொடரில் தன்னை சீண்டிய ஸ்ரீசாந்திற்கு, இளம் வீரர் ஜெய்ஸ்வால் சரியான பதிலடி கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உள்ளூர் டி.20 தொடரான சையத் முஸ்தாக் அலி தொடர், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். இளம் வீரர்கள் தங்களது திறமைகளை நிரூபிப்பதற்கு வாய்ப்பாக அமையும் இந்த தொடரானது ஒவ்வொரு வருடமும் வழக்கமாக நவம்பர் மாதங்களிலேயே நடத்தப்படும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் தொடர் தாமதமாக நடத்தப்பட்டதால், இந்த வருடத்திற்கான சையத் முஸ்தாக் அலி தொடர் நடத்தப்படாமல் இந்த வருடம் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது, சூதாட்ட புகாரில் சிக்கியதால் கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யப்பட்டு, தற்போது தடை காலத்தில் இருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், தற்போது சையத் முஸ்தாக் அலி தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் மும்பை அணியை சேர்ந்த 19 வயது இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஸ்ரீசாந்த் பந்தை அடிக்க முயன்று அதை மிஸ் செய்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீசாந்த் பேட்ஸ்மேன் ஜெய்ஷ்வாலை ‘என்ன பந்த அடிக்க ட்ரை பண்றியா’ என கேட்பது போல முறைத்துப் பார்த்தார். அதற்கு பதில் ஏதும் சொல்லாத யாஷஸ்வி, அதே ஓவரில் ஸ்ரீசாந்த் வீசிய அடுத்த இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டார். அதோடு நிற்காமல் அதற்கடுத்த பந்தையும் பவுண்டரிக்கு விரட்டினார். அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் எடுக்கப்பட்டது.

இருப்பினும் இந்த ஆட்டத்தை கேரள அணி வென்றது. அந்த அணியின் தொடக்க வீரர் முகமது அசாருதீன் 54 பந்துகளில் 137 ரன்களை எடுத்தார். இதன் மூலம் மும்பை நிர்ணயித்த 197 ரன்களை கேரளா சுலபமாக சேஸ் செய்தது.

Mohamed:

This website uses cookies.