வீடியோ : ஓடிவந்து ஸ்டம்பின் மேல் விழுந்து ஜாண்டி ரோட்சை போலவே ரன் அவுட் செய்த வினய் குமார்
ரஞ்சி டிராபியில் விளையாடும் மாநில அணிகளுக்கு இடையில் சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மண்டலம் வாரியாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் கர்நாடகா – பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. கவுதம் 36 ரன்னும், ஜோஷி அவுட்டாகாமல் 40 ரன்னும் அடித்தனர். பஞ்சாப் அணியின் பால்தேஜ் சிங் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டையில் முடிந்தது. தொடக்க வீரர் மந்தீப் சிங் 45 ரன்னும், ஹர்பஜன் சிங் 33 ரன்னும் எடுத்தனர்.
ஆட்டம் டையில் முடிந்ததால், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
ரஞ்சி கோப்பையில் ஆடிய அணிகளை வைத்து சையத் முஷ்டாக் அலி கோப்பை என்னும் டி20 தொடர் நடந்த வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் கர்நாடக கேப்டன் வினய் குமார் ஜாண்டி ரோட்ஸ் செய்த ரன் அவுட் போன்றே ஒரு ரன் அவுட் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்த போட்டியில் குர்கீரட் சிங் அடித்த பந்தை மிட் ஆபில் இருந்து பிடித்து ஓடி வந்து ஸ்டம்பின் மேல் அப்டியே விழுந்து அவரை ரன் அவுட் செய்துள்ளார். மேலும் ஜேந்த வீடியோவை ஜாண்டி ரோட்சின் ட்விட்டர் பக்கத்தில் போட்டு எப்படி இருக்கு கோச் எனவும் கேட்டுள்ளார் வினய் குமார்