சையத் முஷ்டாக் அலி டிராபி 2018: ஹர்பஜன் கேப்டன், யுவராஜ் துணைகேப்டன்

இந்த வருட சையத் முஷ்டாக் அலி டிராபிக்கு பஞ்சாப் அணியின் கேப்டனாக ஹர்பஜன் சிங்கையும் துணை கேப்டனாக யுவராஜ் சிங்கையும் நியமித்துள்ளார். முதல் போட்டி டெல்லி அணியுடன் டெல்லியில் விளையாடுவதற்காக பஞ்சாபில் இருந்து இன்று பஞ்சாப் வீரர்கள் புறப்படுகிறார்கள்.

மீண்டும் அணிக்கு திரும்பினார் மந்தீப் சிங். முதுகு வலி காரணமாக கடந்த 7-8 மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது முதுகு வழியில் இருந்து மீண்டதும் மீண்டும் அணியில் இடம் பெற்றார்.

இளம் வீரர் அன்மோல்ப்ரீட் சிங்கும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளார். இந்த ரஞ்சி டிராபி சீசனில் 5 போட்டிகளில் விளையாடிய அவர் 753 ரன் அடித்து அசத்தினார். அவரது மாநிலத்திற்காக அவர் ஏற்கனவே இரண்டு டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி இருக்கும் குர்கீரட்ச்சிங் மண், மன்ப்ரீட் க்ரேவால், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா மற்றும் பரிந்தர் சரண் ஆகியோரை பொறுத்து தான் இந்த அணியின் வெற்றி இருக்கிறது. இந்த அணிக்காக இவர்கள் விளையாடி இருக்கிறார்கள் மற்றும் இந்த முறை கோப்பையை வெல்லவும் காத்திருக்கிறார்கள்.

New Delhi: Siddarth Kaul of Sunrisers Hyderabad celebrates fall of Karun Nair’s wicket during an IPL 2017 match between Sunrisers Hyderabad and Delhi Daredevils at Feroz Shah Kotla in New Delhi on May 2, 2017. (Photo: Surjeet Yadav/IANS)

மீண்டும் ஐபில் போட்டிகளில் விளையாட இது மனன் வோஹ்ராவுக்கு நல்ல வாய்ப்பு. கடந்த முறை அவரை எந்த அணியும் வாங்கவில்லை. இதனால், மீண்டும் ஐபில் அணிகள் அவரை ஏலத்தில் வாங்க, இந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும்.

பஞ்சாப் அணி: ஹர்பஜன் சிங் (கேப்டன்), அபிஷேக் குப்தா, யுவராஜ் சிங் (துணை கேப்டன்), மந்தீப் சிங், மனன் வோஹ்ரா, குர்கீரத் சிங் மண், அன்மோல்ப்ரீட் சிங், சன்விர் சிங், சித்தார்த் கவுல், மன்ப்ரீட் க்ரேவால், சந்தீப் சர்மா, பட்டேஜ் சிங், வினய் சவுதாரி, மயங்க் மார்கண்டே, சரத் லும்பா, பரிந்தர் சரண்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.