நடராஜன் யார்க்கருக்கு மட்டும் ஸ்பெஷலிஸ்ட் இல்லை! அவரிடம் வேறு ஒரு ஸ்பெஷல் திறமை இருக்கிறது! விவிஎஸ் லட்சுமணன்!

நடராஜன் யார்க்கருக்கு மட்டும் ஸ்பெஷலிஸ்ட் இல்லை! அவரிடம் வேறு ஒரு ஸ்பெஷல் திறமை இருக்கிறது! விவிஎஸ் லட்சுமணன்!

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் முதன்முறையாக இடம்பெற்றிருக்கிறார் சேலத்தைச் சேர்ந்த தங்கராசு நடராஜன். உள்ளூர் போட்டிகளில் நம்மைப்போல் விளையாடிவிட்டு டென்னிஸ் பந்தில் வளர்த்துக்கொண்ட திறமையை வைத்து தற்போது சர்வதேச அரங்கில் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கான இந்த வருடம் ஆடிய அவரது பந்து வீச்சை பார்த்து கிரிக்கெட் உலகம் மிரண்டு போயிருக்கிறது

ஒரு உள்ளூர் வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரில் 74 யார்க்கர் வீசியிருக்கிறார். இதுபோன்ற ஒரு வீரரை நாங்கள் பார்த்ததே இல்லை என கிரிக்கெட் உலகம் அவரை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக டெல்லி அணியின் ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற வீரர்களை வைத்து கடைசி ஓவரை வீசி 7 ரன் மட்டுமே கொடுத்திருந்தார். அவர் வீசும் ஒரு பந்துகள் கூட தப்பாது அவர் வீசுவது எல்லாமேதுல்லியமான யார்க்கர் ஆகத்தான் இருக்கும்

ஆனால், எல்லோருக்கும் நடராஜனை யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் ஆகத் தான் தெரியும். ஆனால் அவரது பந்து வீச்சில் பல வேறு வேரியேசன் இருக்கிறது. ஐபிஎல் தொடரில் அதனை காட்டவில்லை ஷார்ப் பவுன்சர், ஆஃப் கட்டர், ஸ்லோயர் பால் போன்ற பல வெரைட்டியான பந்துகளை வீச கூடியதுதில் அவர் வல்லவர். அது ஆஸ்திரேலிய தொடரில் வெளிப்படும் என்று தெரிவித்திருந்தார் விவிஎஸ் லட்சுமணன்

மேலும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அவர் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. அப்படி அவர் இடம்பெற்றால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அந்த அளவிற்கு அவரிடம் திறமை இருக்கிறது அதற்கு டிவிலியர்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதே சான்று

இந்திய அணிக்காக முதன் முதலில் இடம் பெற்றுள்ள நடராஜன் 22 ஐபிஎல் போட்டியில் விளையாடி 18 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார் அதிலும் குறிப்பாக இந்த வருடம் 15 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.