பல பெண்களுடன் தொடர்பு..? மிகப்பெரும் சர்ச்சையில் சிக்கிய பிரபல வீரர்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான இமாம் உல் ஹக் பல பெண்களுடன் தொடர்ப்பு வைத்திந்தாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் உலகக் கோப்பை தொடரில் அந்த அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது மீது விமர்சனங்கள் எழுந்தன.
பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை விட்டு வெளியேறினாலும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக், சில போட்டிகளில் சிறப்பாக ஆடினார். பங்களாதேஷூக்கு எதிராக அதிரடி சதம் விளாசி ஆறுதல் அளித்தார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கின் மருமகனான இவர், பல பெண்களுடன் தொடர்பு வைத் திருந்தது தெரிய வந்துள்ளது. அவர்களுடன் இமாம், சாட்டிங் செய்த ஸ்கிரீன் ஷாட்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த விவகாரம், சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக இமாம் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. இதனால், இமாம் உல் ஹக்கை, ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.