ஐசிசி நிர்வாகம் டி10 போட்டிகளை நடத்த இந்த வருடம் தாமாக முன்வந்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டி10 வகையான போட்டிகளை நடத்த துபாயில் இருந்து ஐசிசி நிர்வாகத்திடம் அனுமதிக்காக காத்திருந்து அனுமதி பெற்று நடத்தியது. அனால், இம்முறை இரண்டாவது சீசனை தாமாக முன்வந்து நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய டி10 போட்டிகளின் சேர்மன் ஷாஜி உல் முல்க் கூறியதாவது, இப்படி ஐசிசி கூறியதன் மூலம் இந்த ஆண்டு பார்ட்னர்ஸ், ஸ்டாக் ஹோல்டர் மற்றும் பல முன்னணி வீரர்களும் தாமாக வந்து ஆட விருப்பமும் தெரிவித்துள்ளனர். இதனால், ஒவ்வொரு வருடமும் எங்களுக்கு வளர்ச்சி முகமாகவே இருக்கிறது. இந்த வகையான போட்டிகளை அனைவரும் ஏற்கவும் தொடங்கியுள்ளனர் என்றார்.
அரபு நாடுகளின் கிரிக்கெட் வாரிய உறுப்பினர் அப்பாஸ் கூறியதாவது, இங்கு எங்களது நோக்கம் மற்றும் குறிக்கோளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறி கொள்கிறோம். இங்கிருந்து, இந்த வகையான ஆட்டத்தை மக்களிடையே வீரர்களிடையே கொண்டு செல்வது மிக முக்கியமானது என்றார்.
மேலும் இந்த வருடம் இரண்டு புதிய அணிகளும் களமிறங்க இருக்கின்றன. 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடர் 8 நாட்கள் நடைபெற இருக்கிறது. ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறவும் இருக்கிறது.
கடந்த ஆண்டு ஷார்ஜாவில் போட்டிகள் நடைபெற்றது. டிசம்பர் மாதம் 14 முதல் 17 வரை நடந்தது.
முக்கிய வீரர்களான மோர்கன், டார்ரன் சமி, ரஷீத் கான் மற்றும் ஓய்வு பெற்ற வீரர்களான வீரேந்திர சேவாக், அப்ரிடி ஆகியோரும் கடந்த சீசனில் கலந்துகொண்டனர்.
இந்த ஆண்டு மே மாதம் ஐ.சி.சி.யில் இருந்து வரும் SWOT பகுப்பாய்வு T10 லீக்கை விளையாட்டிற்கு அச்சுறுத்தலாக எடுத்துக் காட்டியுள்ளது: “கிரிக்கெட் விளையாட்டு என்பது T10 போன்ற சுருக்கமான வடிவமைப்பில் வாய்ப்புகளைத் தொடர வேண்டும்” என்று அறிக்கை கூறியுள்ளது.
இந்த போட்டிக்கான ஒரு மினி-டிராஃப்ட் ஜூலை மாதம் நடைபெற்றது, இதில் 13 போட்டிகளில் இடம்பெற்றுள்ள போட்டிகளில் பிரெண்டன் மெக்கல்லம், ரஷித் கான், ஷேன் வாட்சன், ஆண்ட்ரே ரசல் போன்ற பெரிய பெயர்களை அணிகள் எடுத்தன.