ரோஹித் சர்மா – விராட் கோஹ்லி இருவரில் யார் சிறந்த கேப்டன்..? பார்த்தீவ் பட்டேல் ஓபன் டாக் !!

சர்வதேச t20 உலக கோப்பை தொடர் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ள நிலையில் இந்திய அணியின் டி20 தொடருக்கான சிறந்த கேப்டன் யார் என்ற விவாதம் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

மேலும் ரோஹித்தை இந்திய அணியின் டி-20 கேப்டன் ஆக ஆக்க வேண்டும் என்று ரசிகர்களும்,கிரிக்கெட் வல்லுனர்களும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதற்க்கு முக்கிய காரணம் விராட் கோலி டி-20 தொடரில் இந்திய அணிக்கு வெற்றிகள் அதிகம் பெற்று தராததெ,குறிப்பாக ஐபிஎல் தொடரில் பெங்கலூர் அணிக்கு தலைமை தாங்கி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெற்றி பெறாதது முக்கிய காரணம் ஆகும்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்திவ் படேல் இதுபற்றி தெரிவித்துள்ளதாவது, நான் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரின் தலைமையை நோக்கி விளையாண்டுள்ளேன் 2015 முதல் 2017 வரை ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய பின் 2018 பெங்களூர் அணிக்காக விராட் கோலியின் தலைமையில் விளையாடினேன்.

என்னைப்பொறுத்தவரை ரோஹித் சர்மா மிகவும் அமைதியானவர். இக்கட்டான நிலையில் மிகவும் தெளிவாக சமாளிக்கக் கூடியவராகவும் திகழ்கிறார். இவருடைய அனுபவமான யோசனை பலமுறை வெற்றிக்கு வழி வகுத்துள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது தெளிவான முடிவு எடுப்பது ரோஹித் சர்மா மிகவும் சிறப்பாக செயல்படுவார் இவர் இக்கட்டான நிலையில் கடினமான முடிவுகளை எடுத்து ஆட்டத்தின் முடிவுகளை மாற்றுவதில் வல்லவர்.

ஆனால் விராட் கோலி முடிவு எடுப்பது அடுத்த வீரர்களை சார்ந்ததாகவே இருக்கும் என்று கூறினார்.

மேலும் விராட் கோலி தலைமையில் இந்திய அணி அதிகமான முறை கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை நலுவவிட்டிறுக்கிறது. இதன் மூலம் நான் விராட் கோலியை குற்றம் சொல்லவில்லை.

விராட் கோலியுடன் ரோகித் சர்மா மிக சிறப்பாக தலைமைப் பொறுப்பை வழிநடத்துகிறார் என்று கூருகிறேன் என்று அவர் கூறினார். விராட் கோலியை விட ரோகித் சர்மாவிற்கு போட்டியில் வெற்றி பெறும் திறமை அதிகம் உள்ளது என்று அவர் கூறினார்

Mohamed:

This website uses cookies.