டி20 உலகக்கோப்பையை வேற எங்கயாவது வச்சுக்கோங்க… – ஐசிசி-க்கு அதிர்ச்சி கொடுத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!

டி20 உலகக்கோப்பையை வேறு எங்காவது வச்சுக்கோங்க… – ஐசிசி-க்கு அதிர்ச்சி கொடுத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!

2020 உலகக்கோப்பையை ஆஸ்திரேலியாவில் நடத்துவது சாத்தியமல்ல என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக கூறியதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் மட்டுமல்லாது அனைத்து நாடுகளின் கிரிக்கெட் தொடர்களும் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஒருசில நாடுகளில் வைரஸ் தாக்கம் குறைவதால் வீரர்கள் மெல்லமெல்ல பயிற்சிக்கு திரும்பியுள்ளார்கள்.

ஆனால், இந்தியாவில் தற்போது நாள் ஒன்றிற்கு 5000-க்கும் அதிகமானோர் வைரஸ் தோற்றால் பாதிப்படைந்து வருவதால், ஜூலை மாதம் வரை வீரர்களுக்கு பயிற்சிகள் துவங்காது என அதிகாரமற்ற செய்திகள் வெளிவருகின்றன.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு, ஜூலை மாதம் விண்டீஸ் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. பல சோதனைகளுக்கு பிறகே வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், இரண்டு வாரங்களுக்கு வீரர்கள் தனித்தனியாக பயிற்சியை மேற்கொள்ளவேண்டும் என்கிற நிபந்தனையும் உண்டு.

அக்டொபர் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் நடத்த திட்டமிட்டுள்ளது ஐசிசி. இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடத்தப்படவுள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவிலும் கொரோனா பரவல் இருப்பதால், திட்டமிட்டபடி நடக்குமா? அப்படியே நடத்தினாலும் ரசிகர்கள் இல்லாமல் நடந்தால் அதனை ஆஸ்திரேலியா நிர்வாகம் சமாளிக்குமா? போன்ற கேள்விகளும் தொடர்ந்து எழுகின்றன.

இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரை நடத்துவது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், “டி20 உலகக்கோப்பை தொடர் அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்படவில்லை. அதேநேரம் ஒத்திவைக்கப்படவும் இல்லை.”

“இன்னமும் பல நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாக நிலவி வருகிறது. இந்த சாத்தியமற்றதாக படுகிறது. ஆஸ்திரேலியாவில் 16 நாடுகளைச் சேர்ந்த வீரர்களை வரவழைப்பது என்பது பெரும் பாதிப்பிற்கு வழிவகுக்கலாம். அல்லது இவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதும் மிகவும் கடினம். ஐசிசி இடம் இதுகுறித்து பேசியுள்ளோம். அங்கு கூட்டங்கள் நடத்தி முடிவெடுக்கவுள்ளது.” என்றார்.

 

Prabhu Soundar:

This website uses cookies.