நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா துவக்க வீரராக செயல்படாதது மிகப்பெரிய தவறு என்று இலங்கை அணி முன்னாள் கேப்டன் மகிளா ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.
2021 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தான் கோப்பையை கைப்பற்றும் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் இந்திய அணி கத்துக்குட்டி போல் விளையாடி அடுத்தடுத்து பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியது.
குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தைரியமாக செயல்படவில்லை என்று போட்டியின் முடிவுக்குப் பின் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார் விராட் கோலியின் இந்த பேச்சு கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
நியூசிலாந்து அணிக்கு பயந்துதான் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மாற்றப்பட்டனர், துவக்க வீரராக இஷன் கிஷன் மற்றும் கே எல் ராகுல் களமிறங்கினார், அவர்களைத் தொடர்ந்து துவக்க வீரராக களமிறங்க வேண்டிய ரோஹித் சர்மா மூன்றாவது இடத்திலும், எப்பொழுதும் 3-வது இடத்தில் களமிறங்க கூடிய விராட்கோலி 4-வது இடத்தில் களம் இறங்கினார் என்று சுனில் கவாஸ்கர் போன்ற கிரிக்கெட் வல்லுநர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் பொழுது தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன பத்திரிகையாளர்களின் சந்திப்பின் பொழுது இந்திய அணி குறித்து பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், ஒரு வீரர் எந்த இடத்தில் வேண்டுமானாலும் விளையாட கூடியவராக இருக்கலாம் ஆனால் எப்பொழுதுமே ஒரு அணியின் முதல் மூன்று பேட்ஸ்மென்கள்(டாப் ஆர்டர்) மாற்றி விளையாட வைக்க கூடாது, அப்படி ஒரு வேலை செய்தால் அது மிகப்பெரும் சொதப்பலாக அமைந்துவிடும், மேலும் 3-வது இடத்தில் களம் இறங்க கூடிய பேட்ஸ்மேன் சூழலுக்குத் தகுந்தவாறு போட்டியின் முடிவு வரை தனது அணிக்கு ரன்களை குவிக்க கூடிய திறமை பெற்றிருக்க வேண்டும்.
டி20 தொடரை பொறுத்தவரை விராட் கோலி துவக்க வீரராக அல்லது மூன்றாவது இடத்திலும் மிகப் பிரமாதமாக பேட்டிங் செய்வார். அதே போன்று கே எல் ராகுல் 4வது இடத்தில் களமிறங்கினாலும் சிறப்பாக விளையாடக் கூடிய வல்லமை படைத்தவர். ஆனால் ரோஹித் சர்மா எப்பொழுதும் துவக்க வீரராக மட்டுமே களமிறங்க வேண்டும் அப்பொழுது தான் அவர் சிறப்பாக செயல்படுவார்