இந்த பையன் தான் மாஸ் காட்ட போறான்… அடித்து சொல்லும் தினேஷ் கார்த்திக் !!

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வெற்றிக்கு வருன் சக்கரவர்த்தி மிக முக்கிய வீரராக இருப்பார் என்று இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

2021 உலக கோப்பை தொடர் தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது இந்த தொடரில் நாளை(அக்டோபர் 24) பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது. ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்பதால் அது சம்பந்தமான கருத்துக்கள் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட அனைவரும் அது சம்பந்தமான கருத்துக்களை பேசி வருகின்றனர்.

இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் வருன் சக்கரவர்த்தி குறித்து தனது கருத்தை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், கடந்த காலத்தைவிட இந்திய அணியின் பந்துவீச்சு தற்பொழுது மிகவும் மேம்பட்டுள்ளது, இதன் காரணமாக இந்திய அணி வெற்றி பெற அணியாக திகழ்கிறது வேகப்பந்து வீச்சில் பும்ரா,முகமது ஷமி, ஷர்துல் தாகூர் மற்றும் புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்கள் தங்களது பங்களிப்பை மிகச் சிறந்த முறையில் இந்திய அணிக்காக கொடுக்கின்றனர்.

மேலும் வருன் சக்கரவர்த்தியைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் இந்திய அணியின் வெற்றிக்கு வருன் சக்கரவர்த்தி மிக முக்கிய வீரராக திகழ்வார்,அவருடைய பந்துவீச்சை உலக கோப்பை தொடரில் பங்குபெறும் பல பேட்ஸ்மேன்கள் எதிர் கொண்டது கிடையாது, இவரைப்போன்று பந்து வீசக்கூடிய வீரர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர், மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் நிச்சயம் வருன் சக்கரவர்த்தி ஏதாவது சிறப்பாக செய்வார் என்று வருன் சக்கரவர்த்தியை பாராட்டிப் பேசியுள்ளார்.

மேலும் இந்த உலகக் கோப்பைத் தொடரில் வருன் சக்கரவர்த்தி பங்கு பெறுவாரா மாட்டாரா என்ற சந்தேகம் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாக இருக்கும் நிலையில் வருன் சக்கரவர்த்தி நிச்சயம் 100% இந்த உலக கோப்பை தொடரில் பங்கு பெறுவர் என்று தினேஷ் கார்த்திக் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.