கடந்த 2021 உலகக்கோப்பை தொடரில் செய்த தவறையே செய்து விடக்கூடாது என்பதில் தீவிரம் முனைப்பு காட்டும் இந்திய அணி இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை பல்வேறு விதமான தொடரிலும் ஈடுபடுத்தி தரமான வீரர்களை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்கு பிரதிபலனாக சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஆவேஷ் கான் போன்ற வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் எதிர்கால இந்திய அணி சிறந்த முறையில் கட்டமைக்க வேண்டும் என்பதற்காக இந்திய அணி பல்வேறு விதமான திட்டங்களை எடுத்து வருகிறது, அந்த வகையில் எதிர்வரும் உலகக்கோப்பை தொடருக்குப்பின் பெரும்பாலான சீனியர் வீரர்கள் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அப்படி எதிர்வரும் உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் இருந்து நீக்கப்படும் ஐந்து வீரர்கள் பற்றி இங்கு காணோம்..
தினேஷ் கார்த்திக்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருக்கும் தினேஷ் கார்த்திக் நிச்சயம் எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்று பலரும் இந்திய அணிக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இருந்த போதும் எதிர்வரும் உலகக்கோப்பை தொடருக்குப்பின் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் மறுக்கப்படும் என்று அறியப்படுகிறது, ஏனென்றால் ஏற்கனவே வயது முதிர்வு காரணமாகத்தான் இந்திய அணில் இருந்து தினேஷ் கார்த்திக் ஓரங்கட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.