எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பங்களாதேஷ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.
டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் துவங்க உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இந்த தொடரின் முதல் போட்டி அக்டோபர் 16ம் தேதி நடைபெற உள்ளது.
டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தங்களது அணிகளை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்திய போன்ற முக்கிய அணிகள் ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியமும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான பங்களாதேஷ் அணியை நேற்று அறிவித்துள்ளது.
ஷகீப் அல்ஹசன் தலைமையிலான பங்களாதேஷ் அணியில், நீண்ட காலம் தன்னுடைய பார்மை மீட்டெடுக்க முடியாமல் தவித்து வந்த ஆல்ரவுண்டர் மஹமதுல்லா நீக்கப்பட்டுள்ளார். மேலும் இவரைத் தொடர்ந்து ஆசிய கோப்பையில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பர்வீஸ் ஹுசைன் எமான், அனாமுல் ஹக் மற்றும் முகமது நைம் நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் காயம் காரணமாக ஆசியக் கோப்பையில் இடம் பெறாமல் போன லிட்டன் டாஸ் மற்றும் நூருல் ஹசன் ஆகிய இரு வீரர்களும் அணிக்கு திரும்பியுள்ளனர்.
இதைதவிர்த்து பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிராக எதிர் கொண்ட முத்தொடர் போட்டியில் பங்கேற்ற அதே அணியை பங்களாதேஷ் அணி, டி20 உலகக் கோப்பை தொடருக்கும் தேர்ந்தெடுத்துள்ளது.
உலகக் கோப்பை தொடருக்கான பங்களாதேஷ் அணி..
ஷகீப் அல்ஹசன் (c), லிட்டன் தாஸ், தாஷ்கின் அஹமத், சபீர் ரஹ்மான், யாசிர் அலி எபோடட் ஹுசைன், மெஹதி ஹசன் மிராஜ், நூருல் ஹசன், ஹசன் மஹ்மூத், அபீப் ஹுசைன், முஸ்டாபிஜூர் ரஹ்மான், நசும் அஹ்மத், மோசாடேக் ஹுசைன், முஹம்மத் சைபுதீன், நஜ்முல் ஹுசைன்.
ஸ்டான்ட்-பை வீரர்கள்..
சௌம்யா சர்கர், ஷரிபுல் இஸ்லாம்,ரிஷாத் ஹுசைன்,ஷாக் மெஹ்தி ஹசன்.