டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் துவங்க உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இந்த தொடரின் முதல் போட்டி அக்டோபர் 16ம் தேதி நடைபெற உள்ளது.
ஒவ்வொரு அணியின் கணவுக்கோப்பையாக இந்த உலகக் கோப்பை தொடர் இருப்பதால் தொடரின் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் இந்த தொடர் குறித்த சுவாரஸ்யமான பல தகவல்கள் வெளியாகி வருகிறது.
ந்த வகையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு உலகக் கோப்பை தொடர்கான அணியில் இடம்பெறாமல் போன வீரர்கள் மீண்டும் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அப்படிப்பட்ட ஐந்து வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
தீபக் சஹர்.
காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் தீபக் சஹர், நடந்து முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மீண்டும் அணியில் ரீ-என்ட்றி கொடுத்தார்.
பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தும் திறமை படைத்த சஹர் இந்திய அணிக்காக சில முக்கியமான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆனால் இவரை உலகக்கோப்பை தொடர்கான இந்திய அணியில் சேர்க்கவில்லை. வேகப்பந்து வீசக்கூடிய திறமையான ஆல்ரவுண்டரான இவரை உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று சபாக் கரீம் உள்ளிட்ட முக்கிய கிரிக்கெட் ஆலோசகர்கள் இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்து வருவதால், நிச்சயம் எதிர்வரும் அறிவிப்புகளில் தீபக் சஹர் இந்திய அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.