ஸ்ரேயஸ் ஐயரால் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க முடியுமா..? ஓபனாக பேசிய முன்னாள் வீரர் !!

ஷ்ரேயாஸ் ஐயர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று விட வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டுதான் உள்ளார் என் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 27ம் தேதி துவங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்தது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் கே.எல் ராகுல், விராட் கோலி ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.

அதே போல் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அர்ஸ்தீப் சிங், தீபக் ஹூடா, சாஹல், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

ஆனால் இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது சமி, சுப்மன் கில் போன்ற வீரர்களுக்கு அணியிலேயே இடம் கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்றாலும், ஒரு நாள் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயரை 15 நபர் கொண்ட குழுவில் இல்லாமல் ஸ்டான்பை வீரராக வைத்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்னதான் ஸ்ரேயாஸ் ஐயர் பவுன்சர் பந்துகளுக்கு தடுமாறினாலும் கடந்த சில போட்டிகளில் இவர் பிரமாதமான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு நாள் தொடர் ஒருபுறம் இருந்தாலும் ஸ்ரேயாஸ் ஐயர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எப்படியாவது இடம் பெற வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்து வருகிறார். இவர் கடந்த 2021 உலககோப்பை தொடர்பு பின் நடைபெற்ற 17 டி20 போட்டிகளில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 479 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார்.

ஆனால் சீனியர் வீரர்கள் மற்றும் சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முக்கிய வீரராக கருதப்படுவதால் இவருக்கு இடம் கிடைப்பது சந்தேகம்தான் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ஆசிய கோப்பையில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் புறக்கணிக்கப்பட்டாலும் உலகக்கோப்பை தொடருக்கான போட்டியில் பங்கு பெறுவதற்கு ஷ்ரேயாஸ் ஐயர் போட்டி போட்டுக் கொண்டு தான் இருக்கிறார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் மட்டும் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா தெரிவிக்கையில், “கடந்த உலகக் கோப்பை தொடர்க்கு பின் ஷ்ரேயாஸ் ஐயரின் சர்வதேச போட்டிக்கான புள்ளி விவரங்கள் பிரமிப்புட்டுகிறது,, அவருடைய பெயர் ஆசிய கோப்பையில் இடம் பெறாமல் போகலாம், ஆனால் அது வாக்குவாதத்தை கிளப்பியுள்ளது. கடந்த உலகக்கோப்பை தொடருக்குப்பின் ஸ்ரேயஸ் ஐயர் பங்கேற்ற 17 போட்டிகளில் 479 ரன்கள் அடித்துள்ளார் அதில் இவருடைய ஆவரேஜ் 40 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 140, அவர் இன்னும் உலகக்கோப்பை தொடருக்கான போட்டியில் பங்கு பெறுவதற்கு போட்டி போட்டுக் கொண்டுதான் உள்ளார் என்று ஆகாஷ் தெரிவித்திருந்தார். மேலும் சூரியகுமார் யாதவ் குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சூரிய குமாரின் பெயர் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.