2022 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கான போட்டி பட்டியல் !!

2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது, இதில் இந்திய அணிக்கான அட்டவணையை ஸ்டார்ஸ்போர்ட்ஸ் இந்தியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலிய நாட்டில் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை நடைபெற உள்ளது.

இதில் குரூப் 2 வில் இந்தியா பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது, மேலும் இதனைஅடுத்து தகுதி சுற்றில் வெற்றி பெறும் இரண்டு அணிகளும் குரூப்-2 வில் இணையும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னிலையில் 2022 டி20 உலகக் கோப்பை தொடரின் இந்திய அணியின் போட்டிக்கான பட்டியலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது,இதில் இந்திய அணி அக்டோபர் 23ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடனான தனது முதல் போட்டியை மெல்பர்ன் மைதானத்தில் விளையாட உள்ளது.

https://www.instagram.com/p/CY-QVQbKzB7/?utm_source=ig_web_copy_link

இதனை அடுத்து தனது இரண்டாவது போட்டியை அக்டோபர் 27-ஆம் தேதி தகுதிச்சுற்றில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் அணியுடன் இந்திய அணி விளையாட உள்ளது.

மேலும் மூன்றாவது போட்டியாக பெர்த் மாகாணத்தில் அக்டோபர் 30ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

மேலும் இதனை அடுத்து பங்களாதேஷ் அணிக்கு எதிரான நான்காவது போட்டியை அடிலெய்ட் மைதானத்தில் நவம்பர் 2ஆம் தேதி இந்திய அணி விளையாட உள்ளது மேலும் அதனை தொடர்ந்து சூப்பர் 12 போட்டியின் இறுதி ஆட்டம், குரூப் B தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இந்திய அணி மோதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி பரிதாபமாக தோல்வியை தழுவி அரையிறுதிப் போட்டிகள் கூட முன்னேற முடியாமல் போனதால் இந்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இன்னும் அதிகமான எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டுள்ளனர், மேலும் லிமிடெட் ஓவர் போட்டிகளுக்கான கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதால்,ஏதாவது அதிசயம் நடைபெறுமா என்று ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Mohamed:

This website uses cookies.