இந்த வருடம் டி.20 உலகக்கோப்பை இல்லை..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுகிறது !!

இந்த வருடம் டி.20 உலகக்கோப்பை இல்லை..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுகிறது

இந்த வருடம் நடைபெற இருந்த டி.20 உலகக்கோப்பையானது ரத்து செய்யப்பட்ட உள்ளதாகவும், இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வெளிக்கிழமை வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

டி.20 உலகக்கோப்பையை அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் வைத்து நடத்த ஐ.சி.சி., திட்டமிட்டிருந்தது. கொரோனாவின் கோரதாண்டவம் இன்னும் முடியாமல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் இந்த வருடம் டி.20 உலகக்க்கோப்பையை நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

டி.20 உலகக்கோப்பையை தள்ளி வைத்தாலோ அல்லது ரத்து செய்தாலோ மிகப்பெரும் இழப்பு ஏற்படும் என்பதால் ஐ.சி.சியும் இறுதி முடிவு எடுக்க முடியாமல் திணறி வந்தது.

இந்தநிலையில், டி.20 உலகக்கோப்பையை தள்ளி வைக்க ஐ.சி.சி., முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என தெரியவந்துள்ளது.

ஐ.சி.சி கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. அப்போது டி20 உலக கோப்பையை தொடரை ஒத்திவைப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலுக்கு வலுசேர்க்கும் விதமாக ஆஸ்திரேலிய வீரர்களும் தங்களது பயிற்சியை துவங்கியுள்ளனர். அவர்கள் செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் ஒயிட்பால் கிரிக்கெடிற்கு தயாராகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைப்பு உறுதியாகியுள்ளது.

Mohamed:

This website uses cookies.