டி20 உலகக்கோப்பையை இந்த நாட்டில் நடத்தலாம் – அட்டகாசமான யோசனை சொன்ன முன்னாள் ஜாம்பவான்!

டி20 உலகக்கோப்பையை இந்த நாட்டில் நடத்தலாம் – அட்டகாசமான யோசனை சொன்ன முன்னாள் ஜாம்பவான்!

டி20 உலகக்கோப்பை தொடரை தள்ளிவைக்காமல் இந்தநாட்டில் நடத்தலாம் என அசத்தலான யோசனை கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் ஜாம்பவானுமான டீன் ஜோன்ஸ்.

உலகெங்கும் கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் உட்பட அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், வீரர்கள் பலர் பயிற்சியில் கூட ஈடுபட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்டொபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டி திட்டமிட்டபடி அதே தேதிகளில் நடைபெறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. கிட்டத்தட்ட ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில், ஐசிசி உறுப்பினர்கள் இணையம் வாயிலாக அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் திட்டமிட்டபடி டி20 உலகக்கோப்பை நடத்த முடியுமா? என்பது குறித்து தீர்வு காணவில்லை. எனினும், ஜூன் 10 அன்று மீண்டும் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் டி20 உலகக் கோப்பை குறித்து முடிவெடுக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் கொரோனா இன்னும் கட்டுக்குள் வராததால் இந்த வருடம் நடைபெறுவதாக உள்ள டி20 உலகக் கோப்பையை அடுத்த வருடம் நடத்திக்கொள்வதாக ஐசிசியிடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், “இந்த வருடம் டி20 உலகக் கோப்பையை நடத்துவது என்பது அபாயகரமானது” என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் கூறியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா முற்றிலுமாக கட்டுக்குள் வந்த நியூசிலாந்தில் நாட்டில் இந்தாண்டு டி20 உலகக்கோப்பையை நடத்தினால் ஐசிசி-க்கு எவ்வித பிரச்சினையும் வராது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் டீன் ஜோன்ஸ் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

“தொடர்ந்து 12 நாட்கள் நியூசிலாந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை. அடுத்த வாரம் எச்சரிக்கை வழிமுறை 1-க்கு மாறலாம் என நியூசிலாந்து பிரதமர் ஜசிண்டா ஆர்டெர்ன் கூறியுள்ளார். இதன்மூலம் சமூக இடைவெளி, மக்கள் கூட்டத்துக்கான தடை போன்றவை விலக்கிக் கொள்ளப்படும். ஆதலால், டி20 உலகக் கோப்பையை நியூசிலாந்தில் நடத்தலாமே? இது எனது யோசனை மட்டுமே.” என்று கூறினார்.

Prabhu Soundar:

This website uses cookies.