ஹர்திக் பாண்டியா வேண்டாம்… அடுத்த போட்டியில் இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்கள்; கோரிக்கை வைத்த கவாஸ்கர் !!

ஹர்திக் பாண்டியா வேண்டாம்… அடுத்த போட்டியில் இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்கள்; கோரிக்கை வைத்த கவாஸ்கர்

நெதர்லாந்து அணியுடனான அடுத்த போட்டிக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக தீபக் ஹூடாவிற்கு இடம் கொடுக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்றில் ஒவ்வொரு அணியும் வெற்றிக்காக கடுமையாக போராடி வருகின்றன.

இந்த தொடரில் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி, விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கின் மூலம் பாகிஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெற்றியுடன் இந்த தொடரை துவங்கியது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்ததாக இன்று (27-10-22) நடைபெறும் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

நெதர்லாந்து அணி அவ்வளவு வலுவான அணி இல்லை என்பதால், இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இருந்து ஓரிரு சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியன. குறிப்பாக ஹர்திக் பாண்டியா நெதர்லாந்து அணியுடனான போட்டியில் விளையாட மாட்டார் என்றும், அவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

இந்தநிலையில், இது குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர், ஹர்திக் பாண்டியாவிற்கு சிறிதளவு காயம் ஏற்பட்டிருந்தால் கூட அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு தீபக் ஹூடாவிற்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “ஹர்திக் பாண்டியாவிற்கு சிறிய காயம் ஏற்பட்டிருந்தால் கூட அவருக்கு நெதர்லாந்து அணியுடனான போட்டியில் இருந்து ஓய்வு அளித்துவிட வேண்டும். ஏனெனில் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ள தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டி அதிக சவால் நிறைந்த போட்டி. எனவே நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சீனியர் வீரர்கள் சிலருக்கு ஓய்வு கொடுத்தாலும் அதில் தவறு இல்லை, ஓய்வு கொடுத்தால் தான் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அவர்கள் புத்துணர்ச்சியுடன் விளையாடுவார்கள். அதேவேளையில், டி.20 உலகக்கோப்பை தொடரில் எந்த அணியையும் குறைத்து மதிப்பிட்டுவிட கூடாது. முகமது ஷமிக்கு அடுத்த போட்டியிலும் விளையாட வேண்டும். அவர் இந்த வருடம் முழுவதிலும் குறைவான போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளதால், அவருக்கு ஓய்வு கொடுப்பது தேவையற்றது” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.