இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து அணி குறித்து தனது கருத்தை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.
2021 உலகக் கோப்பை தொடரில் தான் எதிர்கொண்ட நான்கு அணிகளுமே வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து அணியின் இந்த அபாரமான ஆட்டத்தை கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர் மேலும் நிச்சயமாக முன்னேறுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் தங்களது கருத்துக்களை பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் அதிகாரிகளின் சந்திப்பின்போது இங்கிலாந்து அணி குறித்து பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், இங்கிலாந்து அணியை வீழ்த்த முடியும் என்றால் அது நிச்சயம் பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளால் மட்டுமே முடியும், அதிலும் சார்ஜா மைதானத்தில் மிக சிறந்த முறையில் அந்த பந்துவிசினால் மட்டுமே அது சாத்தியம். இந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி செல்சியா அணி போன்றது, செல்சியா ஒருபோதும் EPL டிராபி்யில் சாதரணமாக தோல்வி அடையாது.
மேலும் இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அந்த அணியின் கேப்டன் இயான் மார்கன் சர்வதேச டி20 தொடரில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற வரிசையில் மகேந்திர சிங் தோனி மற்றும் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆப்கான் ஆகிய இருவரின் சாதனையை முறியடித்து முன்னிலை வகிக்கிறார்.மேலும் இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சதமடித்து அசத்தினார்.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தான் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் மோசமாக செயல்பட்டு அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிடுமோ தவித்து வருகிறது, மேலும் இந்த உலக கோப்பை தொடரில் மற்றும் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.