டி.20 உலகக்கோப்பை; வங்கதேசத்திற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது இலங்கை !!

வங்கதேச அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணியும், வங்கதேச அணியும் மோதுகின்றன.

துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இன்றைய போட்டிக்கான இரு அணிகளுமே தலா ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. இலங்கை அணியில் இருந்து மஹீஸ் திக்‌ஷனா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பினுரா பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதே போல் வங்கதேச அணியில் இருந்து தஸ்கின் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நசும் அஹமத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்றைய போட்டிக்கான வங்கதேச அணி;

முகமது நயிம், லிடன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், முஸ்பிகுர் ரஹீம், மஹ்மதுல்லாஹ் (கேப்டன்), அஃபிஃப் ஹூசைன், நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), மெஹ்தி ஹசன், முகமது சைஃபுதீன், நசும் அஹமத், முஸ்தபிசுர் ரஹ்மான்.

இன்றைய போட்டிக்கான இலங்கை அணி;

குசால் பெரேரா (விக்கெட் கீப்பர்), பதும் நிஷான்கா, சாரித் அஸ்லன்கா, அவிக்ஸா பெர்னாண்டோ, பனுகா ராஜபக்சே, தசுன் ஷனாகா (கேப்டன்), வானிண்டு ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, துஸ்மந்தா சம்மீரா, பினுரா பெர்னாண்டோ, லகிரு குமாரா.

Mohamed:

This website uses cookies.