மாஸ் காட்டிய ரோஹித் சர்மா… பழைய பார்மிற்கு திரும்பிய சூர்யகுமார் யாதவ்; ஆஸ்திரேலியாவை அசால்டாக வீழ்த்தியது இந்திய அணி !!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

டி.20 உலகக்கோப்பைக்கான இன்றைய பயிற்சி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 57 ரன்களும், ஸ்டோய்னிஸ் 41* ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல் ராகுல் 39 ரன்களும், ரோஹித் சர்மா 60 ரன்களும் எடுத்து கொடுத்து மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.

மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 27 பந்துகளில் 38 ரன்களும், ஹர்திக் பாண்டியா 8 பந்துகளில் 14 ரன்களும் எடுத்து கொடுத்ததன் முலம் 17.5வது ஓவரிலேயே இலக்கை ஈசியாக எட்டிய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

Mohamed:

This website uses cookies.