“Catches Wins Matches”…. ஒட்டுமொத்த இந்தியாவின் ஹீரோவாக மாறிய சூர்யகுமார் யாதவ்; சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா !!

“Catches Wins Matches”…. ஒட்டுமொத்த இந்தியாவின் ஹீரோவாக மாறிய சூர்யகுமார் யாதவ்; சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

டி.20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டத்தையும் தட்டி தூக்கியுள்ளது.

சர்வதேச டி20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது.

டி.20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிகள் முடிவில் இந்திய அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

வெஸ்ட் இண்டீஸின் பர்படோஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையேயான இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி 76 ரன்களும், அக்‌ஷர் பட்டேல் 47 ரன்களும், கடைசி நேரத்தில் சிவம் துபே 27 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

இதன்பின் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு ரீசா ஹென்ரிக்ஸ் (4), மார்கரம்(4) உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், டி காக் 31 ரன்களும், சிக்ஸர் மழை பொழிந்த ஹென்ரிச் கிளாசன் 27 பந்துகளில் 52 ரன்களும் எடுத்து கொடுத்தன் மூலம் தென் ஆப்ரிக்கா அணியின் வெற்றி வாய்ப்பு அதிகமானது.

ஹென்ரிச் கிளாசனின் சரவெடி பேட்டிங்கின் மூலம் தென் ஆப்ரிக்கா அணி இலகுவாக வெற்றி பெறும் என கருதப்பட்ட நிலையில் 17வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா, கிளாசனின் விக்கெட்டை கைப்பற்றி போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

போட்டியின் 18 மற்றும் 19வது ஓவரை பும்ராஹ் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் மிக சிறப்பாக வீசியதன் மூலம், போட்டியின் கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையை தென் ஆப்ரிக்கா அணி சந்தித்தது.

சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் கடைசி ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா முதல் பந்திலேயே சூர்யகுமார் யாதவின் அசாத்தியமான கேட்ச்சின் மூலம் தென் ஆப்ரிக்கா அணியின் கடைசி நம்பிக்கையான டேவிட் மில்லரின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்தார்.

இதன்பின் களமிறங்கிய ரபாடா ஒரு பவுண்டரி அடித்தாலும் கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா கச்சிதமாக வீசியதால் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டத்தையும் தட்டி தூக்கியுள்ளது.

Mohamed:

This website uses cookies.